TNPSC Thervupettagam

வலசை போகும் பறவைகள் வரவு - முட்டுக்காடு

October 6 , 2026 6 days 91 0
  • வருடாந்திர வலசைப் பருவத்திற்கு முன்னதாக சென்னையைச் சுற்றியுள்ள முட்டுக்காடு-நெம்மேலி முகத்துவார வாழ்விடங்களுக்கு ஆயிரக்கணக்கான வலசை போகும் நீர்வாழ் மற்றும் கரையோரப் பறவைகள் வந்துள்ளன.
  • கோவளம்-கேளம்பாக்கம் உப்பங்கழிகள் வழியாக வட நாடுகளிலிருந்து இப்பறவைகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கின்றன.
  • 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 நிலவரப்படி முகத்துவாரத்தில் குறைந்தது 5,568 நீர்வாழ் மற்றும் கரையோரப் பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
  • இந்தக் கணக்கெடுப்பில் 1,000-க்கும் மேற்பட்ட சிறிய கொசு உள்ளான்கள் (Little Stints), 430 பெரும் பூநாரைகள் மற்றும் 890-க்கும் மேற்பட்ட நீலச்சிறகு வாத்துகள் (Garganeys) அடங்கும்.
  • முகத்துவாரம், உப்பளங்கள் மற்றும் அலை நீர் ஆகியவை இந்த வலசைப் பறவைகளுக்கு முக்கியமான வாழ்விடத்தை வழங்குகின்றன.
  • முக்கிய வலசைப் பருவமான அக்டோபர் மாதத்தில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்