TNPSC Thervupettagam

வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா 2016

December 22 , 2018 2418 days 1247 0
  • 2018 டிசம்பர் 19 அன்று நாட்டில் வாடகைத் தாய்களின் பாதுகாப்பிற்கென வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா 2016 என்ற மசோதாவை மக்களவை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதாவானது வணிக ரீதியிலான வாடகைத் தாய் முறையை தடை செய்து கருணை அடிப்படையிலான பொதுநல வாடகைத்தாய் முறையை மட்டுமே அனுமதிக்கிறது.
  • இந்த மசோதாவானது வாடகைத்தாய் மற்றும் அதன்மூலம் பிறந்த குழந்தை ஆகியோருக்குப் பாதுகாப்பளித்து நீதி நெறிமுறைகளின் படி அமைந்த வாடகைத்தாய் முறையை ஊக்குவிக்குகிறது.
  • வாடகைத்தாய் முறை என்பது கர்ப்பம் தரிக்க இயலாத தம்பதியினர் மற்றும் வாடகைத்தாய் இருவரிடையே அவர்களின் குழந்தையை சுமக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு ஒப்பந்தம் என வரையறை செய்யப் பட்டிருக்கின்றது.
  • இந்த மசோதாவானது ஜம்மு & காஷ்மீர் தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.
  • தேசிய வாடகைத்தாய் வாரியமானது,
    • சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சரைத் தலைவராகவும்
    • இந்திய அரசின் வாடகைத்தாய் விவகாரங்களை கையாளும் துறையின் செயலரை - துணைத் தலைவராகவும்
    • இதர 16 உறுப்பினர்களையும் உள்ளடக்கியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்