TNPSC Thervupettagam

வாடிக்கையாளர் அங்கீகாரத்தின் குரல் 2021

February 14 , 2022 1209 days 548 0
  • சர்வதேச விமானச் சபையின் "உலக வாடிக்கையாளர் அங்கீகார முன்னெடுப்பின்" கீழ் "வாடிக்கையாளர் அங்கீகாரம் பெற்ற விமான நிலையங்கள் பட்டியலில்" இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் உள்ள ஏழு விமான நிலையங்கள் தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளன.
  • இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் உள்ள விமான நிலையங்களான சென்னை, கோவா, கொல்கத்தா, பாட்னா, புனே, சண்டிகர் மற்றும் புவனேஸ்வர், 2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச விமானச் சபையின் விமான நிலையச் சேவை தர ஆய்வில் பங்கேற்றன.
  • "வாடிக்கையாளர் அங்கீகாரம் பெற்ற விமான நிலையங்கள் முன்னெடுப்பானது" சர்வதேச விமானச் சபையினால் தொடங்கப்பட்டது.
  • கோவிட்-19 தொற்றுநோய்களின் போதும் கூட, வாடிக்கையாளர்களின் விமர்சனங்கள் கேட்கப் பட்டு, தொடர்ந்து அவற்றைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்யும் விமான நிலையங்களை அங்கீகரிப்பதற்காக வேண்டி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்