'விக்சித் பாரத் கா அம்ரித் கால் - சேவா, சுஷாசன் ஔர் கரிப் கல்யாண்' என்ற ஒரு தலைப்பிலான ஆவணம் ஆனது, பிரதமரின் 11 ஆண்டுகாலத்திய ஆட்சியின் கீழ் மேற் கொள்ளப் பட்ட முக்கிய சாதனைகள் மற்றும் அடித்தட்டு மக்கள் நிலையிலான அதன் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டில் 61,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன என்ற நிலையில் இது 2018 ஆம் ஆண்டில் 14,431 கோடி ரூபாயாக இருந்தது.
அரசானது 2019 ஆம் ஆண்டில் 100 சதவீதம் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற நாடு என்ற நிலையையும், 2025 ஆம் ஆண்டில் அனைத்து வீடுகளுக்கும் LPG இணைப்பை வழங்கிய அரசு என்ற நிலையையும் எட்டியது.
81 கோடி மக்கள் இலவச உணவு தானியங்களைப் பெறுகிறார்கள், அதே நேரத்தில் சுவச் பாரத் திட்டத்தின் கீழ் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
15 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
அரசாங்கம் செயல்படுத்தியுள்ள வீட்டு வசதித் திட்டமான PMAY திட்டத்தின் கீழ் 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் சிறு தொழில்முனைவோருக்கு சுமார் 52 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டன.