TNPSC Thervupettagam

விக்யான் ஜோதி திட்டத்தின் இரண்டாவது நிலை

February 17 , 2021 1620 days 638 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது விக்யான் ஜோதி என்ற திட்டத்தின் 2வது நிலையைத் தொடங்கியுள்ளது.
  • இது பிப்ரவரி 11 அன்று அறிவியலில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் என்பதின் மீதான சர்வதேச தினக் கொண்டாட்டத்தின்போது தொடங்கப்பட்டது.
  • இது அறிவியல் துறையில் பெண் குழந்தைகளுக்கு நாட்டத்தை ஏற்படுத்தி, தங்களது வாழ்க்கையைக் கட்டமைப்பதை ஊக்குவிப்பதற்காக என்று தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.
  • இது STEM (Science, Technology, Engineering and Mathematics) என்ற முறையைக் கற்றுக் கொள்வதற்காக வேண்டி சிறப்பான குழந்தைகளுக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நிலையை  உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 50 ஜவஹர் நவோதயா வித்யாயாக்களில் (JNV) வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.
  • தற்பொழுது இது 2021-22 ஆம் ஆண்டிற்கு வேண்டி மேலும் 50 JNV-களுக்கு விரிவு படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்