இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையமானது தங்களிடம் காப்பீடு வைத்துள்ளவர்களுக்கு டிஜிலாக்கரில் டிஜிட்டல் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குமாறு காப்பீடு வழங்கும் நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது செலவினத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் காப்பீட்டுக் கோரிக்கைத் தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தவும் வேண்டி உதவ இருக்கின்றது.
டிஜிலாக்கர் என்பது மத்திய அரசினால் தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் உள்ள ஒரு முன்னெடுப்பாகும்.
இதனைப் பயன்படுத்தி, குடிமக்கள் அசல் சான்றிதழ்களை வழங்குபவரிடமிருந்து டிஜிட்டல் வடிவில் செல்லத்தக்க வகையிலான அதிகாரப்பூர்வ ஆவணங்களை / சான்றிதழ்களைப் பெற முடியும்.