நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக, சமக்ரா சிக்சா என்ற திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்ட உறைவிடப் பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு அவரது பெயரிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உறைவிடப் பள்ளிகள்/விடுதிகள் என்று பெயரிடப் படும்.
இதுவரை, பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு மொத்தம் 1063 உறைவிட வசதிகள் (383 உறைவிடப் பள்ளிகள் மற்றும் 680 விடுதிகள்) அனுமதிக்கப் பட்டுள்ளன.
இவற்றில், 12 பள்ளிகளும், 19 விடுதிகளும் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் மேற்கு வங்க மாவட்டத்தில் அமைந்துள்ளன.