TNPSC Thervupettagam

விசாரணை இல்லாவிடின் இரட்டை தண்டனைக்குத் தடையில்லை – உச்ச நீதிமன்றம்

November 12 , 2018 2457 days 760 0
  • ஒரு குற்ற விசாரணைக்கு தவறான அல்லது முறையற்ற அனுமதியின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே, குற்றம் சாட்டப்பட்டவர் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்படும்போது இரட்டை தண்டனை முறைக்கான தடை அவ்வழக்கிற்குப் பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 20 (2) ஒருவர் மீது ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை வழக்குத் தொடரவோ அல்லது தண்டனை அளிக்கப்படவோ கூடாது என அறிவுறுத்துகிறது.
  • இந்த தீர்ப்பானது நீதிபதி R. பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வால் வழங்கப்பட்டது.
  • குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை செய்யப்படாமலேயே அல்லது தண்டனை வழங்கப்படாமலேயே விடுவிக்கப்படும் போது இரட்டை தண்டனை முறை கோட்பாட்டை செயல்முறைப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளது.
  • இதன்படி, முந்தைய அனுமதி உத்தரவு செல்லுபடியாகாததாக காணப்பட்டால் தகுதி வாய்ந்த அதிகாரிகள் விசாரணையைத் தொடர்வதற்கு முறையான அனுமதி உத்தரவை வழங்குவதற்கு எந்தத் தடையுமில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்