புது தில்லியில் மூன்று நாள் நடைபெறும் நிகழ்ச்சியான இன்ஸ்பயர் (Inspire) என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது பதிப்பினை மத்திய மின்சக்தி, மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்திற்கான மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) R.K.சிங் தொடங்கி வைத்தார்.
இன்ஸ்பயர் என்பதன் விரிவாக்கம் (Inspire - International Symposium to Promote Innovation & Research in Energy Efficiency) - ஆற்றல் செயல்திறனில் புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கான சர்வதேசக் கருத்தரங்கு என்பதாகும்.
2018 ஆம் ஆண்டின் பதிப்பானது ஆற்றல் செயல்திறன் சேவைகள் நிறுவனம் (EESL - Energy Efficiency Service Limited) மற்றும் உலக வங்கி ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்தத் துறையில் முதன்முறையாக ஆற்றல் புத்தாக்க சவால் என்று முன்மொழியப்பட்ட #InnovateToINSPIRE என்ற சவால் ஆனது EESL மற்றும் உலக வளங்கள் நிறுவனம் ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்டது.