விசாரணை இல்லாவிடின் இரட்டை தண்டனைக்குத் தடையில்லை – உச்ச நீதிமன்றம்
November 12 , 2018 2463 days 766 0
ஒரு குற்ற விசாரணைக்கு தவறான அல்லது முறையற்ற அனுமதியின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே, குற்றம் சாட்டப்பட்டவர் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்படும்போது இரட்டை தண்டனை முறைக்கான தடை அவ்வழக்கிற்குப் பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 20 (2) ஒருவர் மீது ஒரே குற்றத்திற்காக இரண்டு முறை வழக்குத் தொடரவோ அல்லது தண்டனை அளிக்கப்படவோ கூடாது என அறிவுறுத்துகிறது.
இந்த தீர்ப்பானது நீதிபதி R. பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வால் வழங்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை செய்யப்படாமலேயே அல்லது தண்டனை வழங்கப்படாமலேயே விடுவிக்கப்படும் போது இரட்டை தண்டனை முறை கோட்பாட்டை செயல்முறைப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளது.
இதன்படி, முந்தைய அனுமதி உத்தரவு செல்லுபடியாகாததாக காணப்பட்டால் தகுதி வாய்ந்த அதிகாரிகள் விசாரணையைத் தொடர்வதற்கு முறையான அனுமதி உத்தரவை வழங்குவதற்கு எந்தத் தடையுமில்லை.