விண்வெளிச் சுற்றுப் பாதையில் ஆயுதங்கள் - அமெரிக்கா
September 17 , 2026 3 days 64 0
அமெரிக்க விண்வெளிப் படையானது சுற்றுப்பாதையில் ஆயுதங்களை நிலை நிறுத்தி உள்ளதாக முதல் முறையாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்க விமானப்படை செயலாளர் இந்த ஆயுதங்களை “சுற்றுப்பாதை விண்வெளிக் கட்டுப்பாட்டு ஆயுதங்கள்” (on-orbit space control weapons) என்று கூறினார், ஆனால் அவற்றின் வகை அல்லது நிலைநிறுத்தப்பட்ட தேதியை குறிப்பிடவில்லை.
இந்த ஆயுதங்கள் அமெரிக்கப் படைகள் மற்றும் விண்வெளி அமைப்புகளை விரோத நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கம் கொண்டவை.
இதன் திறன்களில் ஜாமிங் அல்லது பிற வகையான குறுக்கீடுகளுக்கான அமைப்புகள் அடங்கும், ஆனால் சரியான தொழில்நுட்பம் வெளியிடப்படவில்லை.
அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் விண்வெளி எதிர்ப்புத் திறன்களைத் தொடர்ந்து உருவாக்கி சோதித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.