TNPSC Thervupettagam

வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலை

August 7 , 2025 8 days 51 0
  • வின்ஃபாஸ்ட் எனும் வியட்நாமிய மின்சார வாகன (EV) தயாரிப்பு நிறுவனத்தினால் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் அதன் முதல் உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
  • இந்த ஆலையானது, 2024 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கத்துடன் இணைந்து நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது கையெழுத்திடப்பட்ட 16000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்தத் திட்டமானது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 3500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு ஆதரவளிக்கிறது.
  • தூத்துக்குடி ஆலையினை தெற்காசியா, மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவற்றுக்கான அதன் மிகப்பெரியதான ஒரு ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கு வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது.
  • இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களிலும் 40 சதவீதப் பங்கினை தமிழ்நாடு கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்