May 4 , 2019
                                                                          2376 days 
                                      840
                                    
                                   
								   
                                
                                
                                    
 	- அடுத்த மூன்று மாதங்களில் சர்வதேச விமான நிறுவனங்கள் இந்திய வான்பகுதியில் பறக்கும் போது பயணிகளுக்கு இணையச் சேவையை அளிக்கவிருக்கின்றன.
 
 	- உள்நாட்டு விமானங்கள் இதைச் செயல்படுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளும்.
 
 	- 3000 மீட்டர் உயரத்திற்கு மேல் விமானம் சென்ற பின்பு புவிநிலைத் துணைக்கோள் மூலம் இணையச் சேவையைப் பெறும்.
 
 	- இந்தச் செயற்கைக் கோள்கள் விமானத்தின் அலை வாங்கிக்கு நேரடியாக சமிக்ஞைகளை அனுப்பும்.
 
 	- இந்தியாவின் இன்சாட் செயற்கைக் கோள் மட்டுமே இந்தப் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
 	- செயற்கைக் கோள்களின் மூலம் இணையத்தின் நேரடி தொடர்பானது பின்வருவனவற்றின் மூலம் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
 	- Ku கற்றை – 12-18 ஜிகாஹெர்ட்ஸ் (GHz)
 
 	- Ka கற்றை – 26-40 ஜிகாஹெர்ட்ஸ் (GHz).
 
 
                                 
                            
                                
                                Post Views: 
                                840