இது அதிகபட்சமாக 53.5 மில்லியன் யூரோ (சுமார் 73 மில்லியன் டாலர்) ஆக உயர்ந்து உள்ளது என்பதோடு இதில் ஒற்றையர் சாம்பியன்கள் ஒவ்வொருவரும் 3 மில்லியன் யூரோ (4 மில்லியன் டாலர்) பெறுவர்.
அனைத்து இங்கிலாந்து கிளப் குழுவின் அதிகாரிகள் இதனை அறிவித்தனர்.
இந்த ஆண்டு, பழமையான இந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக, கள நடுவர்களுக்குப் பதிலாக மின்னணு முறையிலான ஒரு கள இணைப்பு வசதி அறிமுகப் படுத்தப்பட உள்ளது.