தமிழ்நாடு அரசானது, அனைத்து செயல்பாட்டில் உள்ள 500 சுகாதார மற்றும் நல மையங்களிலும் அனைவருக்குமான தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் (UIP) கீழ் விரிவாக்கப் பட்ட தடுப்பூசி சேவைகளைத் தொடங்கியது.
அனைத்து UIP தடுப்பூசிகளும் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து HWC மையங்களிலும் கிடைக்கப் பெறும்.
அத்தகைய ஏற்பாடானது, தற்போது அனைத்து 2,286 சுகாதார மற்றும் நலச் சேவை மையங்களிலும் கிடைக்கப் பெறுகிறது.
தமிழ்நாடு மாநில அரசானது, ஆண்டுதோறும் தொடர்ந்து 99 சதவீதத்திற்கும் மிகவும் அதிகமான தடுப்பூசி வழங்கீட்டு இலக்கினை அடைந்து வருகிறது.