இந்தியா 2026 ஆம் ஆண்டில் அதன் முதல் விரிவான குடும்ப வருமானங்கள் மீதான கணக்கெடுப்பை நடத்த உள்ளது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆனது இந்த முன்னெடுப்பு குறித்து அறிவித்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது, அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் உள்ள பல்வேறு இடைவெளிகளை நிவர்த்தி செய்து, இந்தியக் குடும்பங்களில் உள்ள வருமானப் பரவல் குறித்த மிகவும் நம்பகமான மற்றும் விரிவான கண்ணோட்டத்தினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் விரைவான எண்ணிம நுட்பம் சார்ந்த மாற்றத்தின் மத்தியில் தொழில் நுட்பத்தை ஏற்பது ஊதிய நிலைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தும் இந்தக் கணக்கெடுப்பு மதிப்பிடும்.