TNPSC Thervupettagam

விவாத் சே விஸ்வாஸ் மசோதா

March 18 , 2020 1869 days 609 0
  • நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் மசோதா, 2020 என்ற ஒரு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதாவானது நேரடி வரி செலுத்துதலுடன் தொடர்புடைய வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் என்ற கருத்தாக்கமானது 2020-21 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது மத்திய  நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனால் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் 31க்குப் பிறகு வரி செலுத்தினால், வரி செலுத்துவோர் பிரச்சினைக்குரிய வரியின் மேல் 110% என்ற அளவில் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று இந்த மசோதா கூறுகின்றது.
  • இந்தத் தேதிக்கு முன்பே வரியானது செலுத்தப் பட்டால், வரி செலுத்துவோர் சர்ச்சைக்குரிய வரியின் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். மேலும் இதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்பட மாட்டாது.
  • மசோதாவின் ஆங்கிலப் பதிப்பு “பிரச்சினையற்ற ஆனால் நம்பிக்கை மட்டுமே கொண்டது” என்ற பொருளைக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்