வெளிநாட்டிற்குச் செல்வோர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்புப் பிரிவு – பஞ்சாப்
September 14 , 2019
2074 days
780
- பஞ்சாப் வேலைவாய்ப்பு உருவாக்கத் துறையானது வேலைக்காக “வெளிநாடு செல்ல விரும்பும்” இளைஞர்களுக்கான ஆட்சேர்ப்பு முகமையில் பங்காற்ற முடிவு செய்துள்ளது.
- இந்தத் துறையானது படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்ப ஒரு சிறப்புப் பிரிவையும் அமைக்க இருக்கின்றது.
- பயண முகவர்கள் மோசடி செய்ததாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இந்தச் சிறப்புப் பிரிவானது நியாயமான கட்டணத்தில் கல்வியை வழங்கும் வெளிநாட்டுப் பொதுப் பல்கலைக் கழகங்களுடன் இணையவிருக்கின்றது.
- இந்த வசதியானது ஏற்கனவே ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருக்கின்றது.
Post Views:
780