TNPSC Thervupettagam

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கானத் தடைகள்

October 18 , 2018 2489 days 758 0
  • வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தற்போது எவ்வித தடைகளுமின்றி அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியும்.
  • முன்பு, தங்களுடைய வருகையிலிருந்து 24 மணி நேரத்திற்குள்ளாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள வெளிநாட்டுப் பதிவு அலுவலரிடம் பதிவு செய்வது கட்டாயமாக இருந்தது.
  • தற்போதைய இந்த ஆணையானது, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் உள்ள 29 மக்கள் வசிக்கும் தீவுகளையும் 11 ஆளில்லாத் தீவுகளையும் வெளிநாட்டவர்கள் பார்க்க அனுமதித்த முந்தைய கொள்கை முடிவிற்குப் பிறகு வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தீவுகள் முன்பு வெளிநாட்டவர்களுக்கு 1963ம் ஆண்டின் வெளிநாட்டவர் ஆணை (தடைசெய்யப்பட்ட பகுதிகள்) என்பதின் கீழ் அனுமதி மறுக்கப்பட்டவையாக இருந்தன.
  • சுற்றுலாத்துறை அமைச்சகமானது ராஜஸ்தான், உத்தரகண்ட், ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் எல்லைப் பகுதிகளிலும் இத்தகைய பயணத் தடைகளை நீக்க வேண்டும் என்று முன்மொழிந்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்