வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பில் பேரழிவுகளின் தாக்கம் குறித்த அறிக்கை 2025
December 9 , 2025 4 days 25 0
இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) வெளியிட்டது.
1991 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், தானியங்கள் அதிகம் பாதிக்கப் பட்டதுடன், பேரழிவுகள் 3.26 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வேளாண் இழப்புகளை ஏற்படுத்தின.
பெரிய அளவிலான வேளாண்மை மற்றும் புயல்கள் மற்றும் வெள்ளங்களால் அதிகப் பாதிப்படைதல் காரணமாக உலகளாவிய வேளாண் இழப்புகளில் 47% ஆசியாவில் பதிவானது.
பேரழிவுகள் ஆனது உலகளாவிய உணவு கிடைக்கும் நிலையை ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 320 கிலோ கலோரிகள் ஆக குறைக்கின்றன.
கடல் வெப்ப அலைகள் உலகளாவிய மீன்வளத்தில் 15 சதவீதத்தினைப் பாதித்து, 1985 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 6.6 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை ஏற்படுத்தின.
இந்திய விவசாயிகள் கோதுமை சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 29.65 அமெரிக்க டாலர்களைச் சேமித்துள்ளதுடன், தரவுத் தளங்கள், முன் எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் வேளாண் வானிலை ஆலோசனைகள் போன்ற டிஜிட்டல் கருவிகள் இதில் அபாயங்களைக் குறைக்க உதவுகின்றன.