TNPSC Thervupettagam

ஷாஹித் உதம் சிங்கின் தியாக தினம் 2025 - ஜூலை 31

July 31 , 2025 2 days 14 0
  • ஏப்ரல் 13, 1919 அன்று, ரவுலட் சட்டத்தை எதிர்த்து ஏராளமான இந்தியர்கள் ஜாலியன் வாலாபாக்கில் கூடினர்.
  • இந்த நாளில், பிரிகேடியர்-ஜெனரல் டயரின் கீழ் ஆங்கிலேயப் படைகள் எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
  • ஜெனரல் டயர் தனது துருப்புக்களை, மக்கள் வெளியேறும் வழிகளைத் தடுத்து, கண்மூடித்தனமாக சுமார் 10 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார்.
  • ஆயிரக்கணக்கான நிராயுதபாணியான பொது மக்கள் கொல்லப்பட்ட இந்தப் படு கொலையின் கொடூரத்தை ஷாஹித் உதம் சிங் நேரில் கண்டார்.
  • 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பழிவாங்கும் விதமாக 1940 ஆம் ஆண்டு லண்டனில் உதம் சிங் மைக்கேல் ஓ'டயரை சுட்டுக் கொன்றார்.
  • உடனடியாக கைது செய்யப்பட்ட சிங் ஒரு சிறிய விசாரணைக்குப் பிறகு, ஜூலை 31, 1940 அன்று லண்டனின் பென்டன்வில் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்