TNPSC Thervupettagam

ஸ்டார்ட்அப் இந்தியா நிதியின் நிதி 2.0

February 17 , 2026 19 hrs 0 min 30 0
  • 10,000 கோடி நிதியுடன் ஸ்டார்ட்அப் இந்தியா நிதியின் நிதி 2.0 (FoF 2.0) திட்டத்திற்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • இந்த நிதி நீண்டகால உள்நாட்டு மூலதனத்தைத் திரட்டுவதையும் இந்தியாவின் புத்தொழில் மற்றும் துணிகர மூலதன சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட புத்தொழில்களுக்கான நிதியின் நிதி (FFS 1.0) ஐப் பின்பற்றுகிறது.
  • FFS 1.0 இன் கீழ், ₹10,000 கோடி 145 மாற்று முதலீட்டு நிதிகளுக்கு உறுதியளிக்கப்பட்டது என்பதோடு இவை 1,370 க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் 25,500 கோடிக்கு மேல் முதலீடு செய்தன.
  • FoF 2.0 இந்தியா முழுவதும் அடிப்படை தொழில்நுட்பம், புத்தாக்க உற்பத்தி, தொடக்க நிலை நிறுவனர்கள் மற்றும் முன்னுரிமைத் துறைகளில் கவனம் செலுத்தும்.
  • இந்தத் திட்டமானது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையால் செயல்படுத்தப் பட்டு, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியால் நிர்வகிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்