ஸ்டாலின் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விலகல்
May 23 , 2026 125 days 232 0
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அதிமுக தலைவர் சைதை எஸ். துரைசாமி ஆகியோர் தொடர்புடைய 2011 கொளத்தூர் தேர்தல் விவகார வழக்கில் தீர்ப்பு வழங்குவதில் இருந்து இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விலகினர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் 2026 ஆம் ஆண்டு மே 15 அன்று இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.
இந்த வழக்கு, சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது நடைபெற்ற "ஊழல் நடைமுறைகள்" தொடர்பான குற்றச்சாட்டுகளைப் பற்றியதாகும்.
வாக்காளர்களைப் பணமும் பரிசுகளும் அளித்து ஈர்த்ததாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது அதிமுக தலைவர் சைதை எஸ். துரைசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மேல்முறையீடு 2017 ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததுடன், விரிவான விசாரணைகளுக்குப் பிறகு 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை, இவர்கள் இருவருமே உறுப்பினர்களாக இல்லாத வேறு ஒரு அமர்வின் முன்பு மீண்டும் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உறுதியான ஆதாரங்கள் இல்லாததாலும், இந்திய சாட்சியச் சட்டத்தின் 65B பிரிவின் கீழ் செல்லுபடியாகும் டிஜிட்டல் சான்றளிப்பு இல்லாததாலும் இந்த குற்றச்சாட்டுகளை சென்னை உயர் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்திருந்தது.
ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக என்று வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டு, 1951 ஆம் ஆண்டு சட்டத்தின் 123 ஆம் பிரிவின் கீழ் வருகிறது.