இது மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்ட இந்த வகையிலான முதல் இனமாகும்.
இங்கு அழிந்துபோன ஸ்டெகோடன் கணேசா எனும் யானை இனத்தின் அரியப் புதை படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இது ஒரு பழங்கால யானை இனமாகும்.
இது நவீன கால ஆசிய யானைகளின் மூதாதைய இனமாகக் கூறப்படுகிறது.
இந்தப் புதைபடிவங்கள் ஆனது, சுமார் 25,000 ஆண்டுகள் பழமையானவை மற்றும் ப்ளீஸ்டோசீன் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்தவையாகும்.
சந்திராபூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட யானைப் படிவமானது, அது 15 அடி உயரம் கொண்டது என காட்டுகிறது.
இந்த இடத்தில், அழிந்து போன இனமான எலிபாஸ் நமடிகஸ் எனும் இனத்தின் யானை போன்ற தலை கண்டுபிடிக்கப் பட்டதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த யானை இனம் ஆனது, சுமார் 2 லட்சம் முதல் 11,700 ஆண்டுகளுக்கு முன்னதான ப்ளீஸ்டோசீன் காலத்தில் இந்தியாவில் வாழ்ந்தது.
இந்த காலக் கட்டத்தின் கடைசி காலம் பனிக்காலம் ஆகும்.
இந்தப் பனியுக காலத்தில் பனிப்படலங்கள் உருகியபோது, இந்தியாவில் மிகப்பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் பல இனங்கள் அழிந்து போயின.
இந்த வெள்ளத்தின் வண்டல் படிவுகளில் பல உயிரினங்களின் சான்றுகள் காணப் படுகின்றன.
மகாராஷ்டிராவின் சிந்துதுர்க், புனே மற்றும் சோலாப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், தெலுங்கானாவின் சில இடங்களிலும் ஆசிய யானைகளின் பல்வேறு புதைபடிவங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
ஆனால் மகாராஷ்டிராவில் ஸ்டெகோடன் யானைகளின் புதைபடிவங்கள் கண்டறியப் படுவது இது முதல் முறையாகும்.
இதில் பெண்கங்கை ஆறு (676 கிலோ மீட்டர்) ஆனது மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அஜந்தா மலைத்தொடரில் உற்பத்தியாகிறது.
இது மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றின் மாநில எல்லைகளுக்கு இடைப்பட்டப் பகுதியில் பாய்ந்து வர்தா நதியில் கலக்கிறது.
இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்து உள்ளது.