ரஷ்யாவின் ஸ்புட்னிக் V எனப்படும் தடுப்பூசியினை அவசரகாலப் பயன்பாட்டிற்கு உபயோகிப்பதை அங்கீகரிக்க இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டகம் (Drugs Controller General of India – DCGI) ஒப்புதல் அளித்துள்ளது.
கோவிசீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகியவற்றையடுத்து இந்த தடுப்பு மருந்தானது அவசரகாலப் பயன்பாட்டிற்கு என்ற கட்டுப்பாட்டகத்தினால் அங்கீகரிக்கப் பட்ட மூன்றாவது தடுப்பூசியாகும்.
இதுபற்றி கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி நிர்வகிப்பு மீதான தேசிய நிபுணர் குழுவின் சந்திப்பில் (National Expert Group on Vaccine Adminsitration for Covid – 19 NEGVAC) விவாதிக்கப்பட்டது.
இக்குழுவின் தலைவர் நிதி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) VK. பால் ஆவார்.
ஸ்புட்னிக் V தடுப்பூசியானது கடந்த ஆண்டு ரஷ்யாவினால் உருவாக்கப்பட்டது.
ரஷ்யாவின் தடுப்பூசியை உபயோகிக்க பதிவு செய்த அதிக மக்கட்தொகையுடைய நாடு இந்தியாவாகும்.
ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய 60வது நாடு இந்தியா ஆகும்.
ஸ்புட்னிக் V தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான ஒரு முன்னணி உற்பத்தி மையமாகவும் இந்தியா உள்ளது.
மேலும் ஹைதரபாத்தில் அமைந்துள்ள டாக்டர் ரெட்டி ஆய்வகம் என்ற மருந்து நிறுவனம், இந்தியாவில் இந்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்குவதற்காக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியைப் பதிவு செய்த (ஆகஸ்ட் 2020) உலகின் முதல் நாடு ரஷ்யாவாகும்.