தற்போதைய தேர்தல் ஆணையரான (Election Commissioner) சுசில் சந்திரா அடுத்த இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக (Chief Election Commissioner - CEC) நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்களால் இந்தியாவின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டார்.
இவர் தற்போதைய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை அடுத்து பதவி ஏற்க உள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையமானது தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர்கள் என்று மூன்று உறுப்பினர்களைக் கொண்டது.
இவர் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தலைமையேற்கும் இரண்டாவது இந்திய வருவாய்ப் பணி (IRS) அலுவலர் ஆவார்.
இந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட முதல் இந்திய வருவாய்ப் பணி அலுவலர் S. கிருஷ்ணமூர்த்தி ஆவார்.
இவர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை, 13வது தலைமை தேர்தல் ஆணையராக மேற்பார்வையிட்டார்.