TNPSC Thervupettagam

ஸ்வஸ்த் நாரி பிரச்சாரத்தின் கின்னஸ் சாதனைகள்

November 3 , 2025 18 days 112 0
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் "ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான்" திட்டத்தின் மூலம் இந்தியா மூன்று கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்தது.
  • 3.21 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதுடன், ஒரு மாதத்தில் ஒரு சுகாதாரத் தளத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பதிவு செய்தற்கான சாதனையும் இதில் அடங்கும்.
  • இரண்டாவது சாதனையானது, 9.94 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பாளர்களுடன், ஒரே வாரத்தில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்கு இணைய வழியில் அதிக மக்கள் பதிவு செய்த சாதனையாகும்.
  • மூன்றாவது சாதனையானது, 1.25 லட்சம் பங்கேற்பாளர்களைக் கடந்து, ஒரு வாரத்திற்குள் மாநில அளவில் முக்கிய அறிகுறிகளுக்கான பரிசோதனைக்கு இணைய வழியில் அதிக மக்கள் பதிவு செய்த சாதனையாகும்.
  • பெண்கள், இளம் பருவப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக செப்டம்பர் மாதம் 17 முதல் அக்டோபர் மாதம் 02 ஆம் தேதி வரை இந்த பிரச்சாரம் நடைபெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்