TNPSC Thervupettagam

ஹண்டா வைரஸ் தீவிர நோய்ப் பரவல்

May 17 , 2026 15 days 248 0
  • ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே அருகே உள்ள டச்சு நாட்டு உல்லாசக் கப்பலான எம்வி ஹோண்டியஷில் ஹண்டாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
  • ஹண்டாவைரஸ் என்பது முக்கியமாக பாதிக்கப்பட்ட கொறித்துண்ணிகளின் (எலி போன்ற விலங்குகள்) சிறுநீர், உமிழ்நீர் அல்லது கழிவுகள் மூலம் பரவக்கூடிய ஒரு விலங்குவழி நோயாகும்.
  • இது ஹண்டாவைரஸ் நுரையீரல் நோய்க்குறி (HPS) மற்றும் சிறுநீரக நோய்க்குறியுடன் கூடிய ரத்தக்கசிவு காய்ச்சல் (HFRS) ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும்.
  • காய்ச்சல், சோர்வு மற்றும் தசை வலி ஆகியவை இதன் ஆரம்பகால அறிகுறிகளாகும், இவை பின்னர் கடுமையான சுவாசப் பிரச்சினைகளாக உருவாகலாம்.
  • இந்த வைரஸ் பொதுவாக மனிதர்களிடையே பரவாது, ஆனால் ஆண்டிஸ் வைரஸ் வகையினத்தில் அரிதான மனிதனுக்கு மனிதன் பரவுதல் காணப்பட்டது.
  • இதற்கு குறிப்பிட்டத் தடுப்பூசியோ அல்லது குணப்படுத்தும் மருந்தோ இல்லை, எனவே தடுப்பு என்பது முக்கியமாகக் கொறித்துண்ணிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சுகாதாரத்தைப் பொறுத்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்