TNPSC Thervupettagam

ஹார்முஸ் கப்பல் போக்குவரத்துப் பாதை ஒப்பந்தம்

August 19 , 2026 6 days 96 0
  • ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகச் செல்லும் போக்குவரத்திற்கான கப்பல் போக்குவரத்து பாதை வரைபடம் குறித்து ஈரானும் ஓமனும் ஒப்பந்தம் ஒன்றில் எட்டியுள்ளன.
  • ஹார்முஸ் நீர்ச்சந்தியானது ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே அமைந்துள்ளது, மேலும் இது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடலுடன் இணைக்கிறது.
  • பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து பாதைகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்ட பின்னர், ஈரானும் ஓமனும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று இருதரப்பு கடல்சார் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.
  • தொழில்நுட்பத் திட்டத்தில் ஓமன் பிரதிநிதிகளுடன் ஈரானியப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
  • 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-க்குள் ஹார்முஸ் நீர்ச்சந்தி மற்றும் பரந்த மத்திய கிழக்கு பகுதியில் 65 உறுதிப்படுத்தப்பட்ட கப்பல் சம்பவங்கள் மற்றும் 17 மாலுமிகள் இறந்து உள்ளதை சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) அறிவித்துள்ளது.
  • இந்த நீர்ச்சந்தியானது பாரசீக வளைகுடாவிற்கும் சர்வதேச கடல் பகுதிகளுக்கும் இடையே செல்லும் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்களுக்கான ஒரு முக்கியமான பாதையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்