ஹீலாக் கிப்பன்ஸ் (Hoolock Gibbons) என்பவை சிறிய அளவிலான குரங்குகளாகும்.
சியாமங்கையடுத்து (Siamang) கிப்பன்ஸ் வகை குரங்குகளில் இரண்டாவது பெரிய குரங்கு வகை இதுவாகும்.
மூன்று வகை ஹீலாக் கிப்பன்ஸ் குரங்கு இனங்கள் உள்ளன.
அவை,
மேற்கத்தியஹீலாக் கிப்பன்
ஸ்கைவாக்கர் ஹீலாக் கிப்பன் மற்றும்
கிழக்கத்திய ஹீலாக் கிப்பன் ஆகும்.
முன்னதாக கிழக்கத்திய ஹீலாக் கிப்பன் மற்றும் மேற்கத்திய ஹீலாக் கிப்பன் ஆகிய இனங்களின் இருப்பிடமாக இந்தியா (வடகிழக்கு இந்தியா) இருந்ததாக கூறப்பட்டு வருகிறது.
இருப்பினும் மேற்கத்திய ஹீலாக் கிப்பன் இனம் மட்டுமே இந்தியாவில் காணப் படுவதாக செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.