தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகமானது சமீபத்தில் 2020 ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு நெறிமுறையின் 142வது பிரிவினை அறிவித்துள்ளது.
இந்தப் பிரிவானது ஆதார் எவற்றிற்கெல்லாம் பொருந்தும் என்பது பற்றி விவரிக்கச் செய்கிறது.
இந்த அறிவிப்பானது பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயனாளர்களிடமிருந்து ஆதார் தகவல்களைச் சேகரிப்பதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கு உதவும்.
இதனுள் புலம்பெயர் தொழிலாளர்களும் அடங்குவர்.
ஒரு ஊழியர் (அ) அமைப்பு சாரா நபர் (அ) வேறு எவரும் அரசுத் திட்டங்களின் மூலம் பயன் பெறுவதற்கு ஆதார் தகவல்கள் கட்டாயம் என 142வது பிரிவு கூறுகிறது.
இதன் மூலம் பெறப்படும் பயன்களாவன : மருத்துவ சிகிச்சைக்கானப் பண உதவி, தொழில் சேவை மையங்களை அணுகுதல், மகப்பேறு உதவிகள், காப்பீட்டுத் தொகையினைப் பெறுதல் போன்றவையாகும்.
சமூகப் பாதுகாப்பு நெறிமுறையானது 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.