TNPSC Thervupettagam

மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு செல்லாது – உச்சநீதிமன்றம்

May 9 , 2021 1526 days 612 0
  • மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மகாராஷ்டிராவின் சட்டமானது செல்லாது என உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வு  ஒரு மனதாக அறிவித்துள்ளது.
  • இது ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சமூகமானது அந்த மாநிலத்தின் 50 சதவீத இட ஒதுக்கீட்டு வரம்பினை மீறி இட ஒதுக்கீட்டைப் பெறுவதே இதற்குக் காரணமாகும்.
  • மேலும் மராத்தா சமுதாயத்தினருக்கு வழங்கப்படும் தனி இடஒதுக்கீடானது சட்டப் பிரிவு 14 (சம உரிமை) மற்றும் சட்டப் பிரிவு 21 (சட்டத்தின் முறைமை) ஆகியவற்றை மீறுவதாகவும் உச்சநீதிமன்றம் கூறுகிறது.
  • மராத்தா இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றப்பட்டதற்கு வழிவகுத்த நீதிபதி N.G. கெயிக்வாட் ஆணையத்தின் தகவல்களும் செல்லாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
  • மகாராஷ்டிராவின் சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டம், 2018 என்ற சட்டத்தினைச் செல்லும் என்று அறிவித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் உச்ச நீதிமன்றம் புறக்கணித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஜுன்  மாதத்தில், மும்பை உயர்நீதிமன்றமானது மராத்தா சமூகத்தினருக்கான 16% இட ஒதுக்கீட்டு அளவினை கெயிக்வாட் ஆணையத்தின் பரிந்துரையின் படி கல்வியில் 12 சதவீதம் எனவும் வேலைவாய்ப்பில் 13 சதவீதம் எனவும் குறைத்தது.
  • உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இந்த குறைக்கப்பட்ட இட ஒதுக்கீடும் கூட ஒரு அதிகார மீறல் என உச்சநீதிமன்றம் தற்போது கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்