TNPSC Thervupettagam

ஹுருன் இந்தியா அமைப்பின் செல்வந்தர்கள் பட்டியல் 2025

October 4 , 2025 19 days 55 0
  • பில்லியனர்களில், 9.55 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் அம்பானி முன்னிலை வகிக்கிறார் என்ற நிலையில் அதைத் தொடர்ந்து 8.14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் கௌதம் அதானி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
  • ஷாருக்கான் (59) 12,490 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் முதல் முறையாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார்.
  • செயற்கை நுண்ணறிவினை மையமாகக் கொண்ட பெர்ப்ளெக்ஸிட்டி நிறுவனத்தின் நிறுவனரான சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (31), 21,190 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் முதல் முறையாக இப்பட்டியலில் இணைந்துள்ளார்.
  • இதன் மூலம் இவர் இப்பட்டியலில் இணைந்த இளம் பில்லியனர் (செல்வந்தர்) என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • HCL குழுமத்தைச் சேர்ந்த ரோஷ்னி நாடார் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற இளம் நபராவார்.
  • 2025 ஆம் ஆண்டு செல்வந்தர்கள்/பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று ள்ளவர்களின் மொத்த சொத்து மதிப்பு 167 லட்சம் கோடி ரூபாய் ஆகும் என்பதோடு இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியளவாகும்.
  • மும்பை நகரானது 451 சேர்க்கைகளுடன் செல்வந்தர்களின் தலைநகராகத் தொடர்ந்து திகழ்கிறது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து பெங்களூரு (116), ஐதராபாத் (102), சென்னை (94) மற்றும் புனே (66) ஆகியவை உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்