TNPSC Thervupettagam

ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2026

July 29 , 2026 16 hrs 0 min 64 0
  • சமீபத்திய 2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இந்தியாவின் கடவுச்சீட்டு தரவரிசை, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்த 75-வது இடத்திலிருந்து 81-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
  • இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமலோ அல்லது வருகையின் போது விசா (visa-on-arrival) பெறும் வசதியுடனோ 55 இடங்களுக்குச் செல்ல முடியும்.
  • சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் (IATA) தரவுகளைப் பயன்படுத்தி 227 பயண இடங்களுக்கான 199 கடவுச்சீட்டுகளை ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு தரவரிசைப் படுத்துகிறது.
  • 192 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கி சிங்கப்பூர் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவை 188 இடங்களுக்கான அணுகலுடன் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.
  • முன் அனுமதி விசா பெறாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகளாவிய பயணச் சுதந்திரத்தை இந்தக் குறியீடு அளவிடுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்