இந்திய ஆயுதப் படைகள் ஆனது, சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு அவசரகால கொள் முதலின் கீழ் செயற்கைக்கோள்களுடன் இணைக்கப்பட்ட கூடுதல் ஹெரான் Mk II ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கு (UAV) வாங்குவதற்கு இஸ்ரேல் நாட்டிடம் கையெழுத்திட்டன.
ஹெரான் Mk II என்பது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) நிறுவனம் உருவாக்கிய நடுத்தர உயரத்தில் இயங்கும் நீண்ட தூரம் இயங்கும் திறன் கொண்ட (MALE) ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) ஆகும்.
35,000 அடி வரையில் பறக்கக் கூடிய இந்த UAV அதிகபட்சமாக 150 நாட்ஸ் வேகத்தில் இயங்கும் திறனும், சுமார் 1,000 கிமீக்கு மேலான இயக்க வரம்பையும் கொண்டுள்ளது.
ஹெரான் Mk II, உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் இலக்கு கண்காணிப்புக்கான மின் ஒளியிழை/அகச்சிவப்பு (EO/IR) உணர்வுக் கருவிகள், நீண்ட தூர வரம்பு கொண்ட ரேடார்கள் மற்றும் ELINT/COMINT அமைப்புகளைக் கொண்டுள்ளது.