TNPSC Thervupettagam

ஹைதராபாத் நிஜாமின் நிதி தொடர்பான வழக்கு

October 4 , 2019 2131 days 815 0
  • 1948 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாம் ஒஸ்மான் அலிகான் என்பவரால் பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையருக்கு மாற்றப்பட்ட நிதி இந்தியாவுக்குச் சொந்தமானது என்று இங்கிலாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • பாகிஸ்தானில் சேருவதற்கான சாத்தியக் கூறுகளின் அனுமானத்தில், நிஜாம் 1948 ஆம் ஆண்டில் 1,007,940 பவுண்டுகள் மற்றும் ஒன்பது ஷில்லிங் ஆகியவற்றை பாகிஸ்தான் உயர் ஆணையருக்கு வழங்கினார்.

  • சுதேச அரசாக இருந்த ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைத்த பின்னர், கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த நிதிக்கான உரிமையைக் கோரி வந்தன.
  • ஏழாவது  நிஜாமின் பேரன்களான முக்கரம் ஜா மற்றும் முஃபாக்கம் ஜா ஆகியோரும் இந்த நிதிக்கான உரிமையைக் கோரி வந்தனர்.
  • 1963 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று தங்களது தாத்தாவால் அமைக்கப்பட்ட அறக்கட்டளையினால் இந்த நிதி அவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
  • அசல் தொகையானது தற்பொழுது 35 மில்லியன்  பவுண்டாக (ரூ. 306 கோடி) அதிகரித்துள்ளது.
  • பிரிட்டன் நீதிபதியான ஸ்மித் என்பவர் 35 மில்லியன் பவுண்ட் என்ற நிதியானது 7வது நிஜாம், அவருடைய இளவரசர்கள் மற்றும் இந்தியா ஆகியோருக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்துள்ளார்.
  • இந்த வழக்கு "ஹைதராபாத் நிதி வழக்கு" என்று பிரபலமாக அறியப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்