TNPSC Thervupettagam

ஹைதராபாத் விடுதலை நாள்

September 8 , 2022 991 days 479 0
  • இந்திய அரசு 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் ஆண்டு முழுவதும் "ஹைதராபாத் விடுதலை நாளினை" நினைவு கூருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • கலாச்சார அமைச்சகமானது இந்தத் தொடக்க நிகழ்வை ஏற்பாடு செய்யும்.
  • மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்தத் தினத்தினை முறையே மராத்வாடா விடுதலை நாளாகவும், ஹைதராபாத்-கர்நாடகா விடுதலை நாளாகவும் ஏற்கனவே அங்கீகரித்திருந்தாலும், இந்த நாளை அந்த மூன்று மாநிலங்களிலும் கடைப்பிடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • 1948 ஆம் ஆண்டு போலோ என்ற நடவடிக்கை மூலம் ஹைதராபாத்தை இந்தியா கைப்பற்றியதை இத்தினம் கௌரவப் படுத்துகிறது.
  • ஹைதராபாத் சமஸ்தானத்தின் கடைசி நிஜாம் ஆன ஒஸ்மான் அலி கான் அசஃப் ஜா VII, 1947 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்தில் சேர முன்வந்தாலும், பின்னர் அவரே அதை நிராகரித்தார்.
  • சர்தார் படேலின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்