மத்திய அரசின் ‘ஒரே தேசம், ஒரே தர அளவு’ திட்டத்தில் இணையும் நாட்டின் முதல் தர நிலை அமைப்பாக ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலை அமைப்பானது (Research Design and Stands Organisation - RDSO) உருவெடுத்துள்ளது.
இரயில்வே அமைச்சகத்தின் முதன்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவான RDSO இந்திய இரயில்வே துறைக்கான தரநிலைகளை நிர்ணயிக்கிறது.
தற்போது RDSO அமைப்பினை மூன்று ஆண்டு காலத்திற்கு ஒரு தரநிலை மேம்பாட்டு அமைப்பாக நிர்ணயித்து இந்தியத் தரநிர்ணய வாரியம் ஒரு அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது.
குறிப்பு
இந்தியத் தரநிர்ணய வாரியமானது (Bureau of Indian Standards – BIS) ‘ஒரே தேசம், ஒரே தர அளவு’ என்ற திட்டத்தினை அமல்படுத்தும் ஒரு நிறுவனமாகும்.
தற்போது இரயில்வே துறையின் சரக்கு மற்றும்சேவைகளின் தரத்தினை உறுதி செய்வதற்கான பரிமாணங்களை RDSO மற்றும் BIS ஆகியவை இணைந்து வரையறுக்கும்.
‘ஒரே தேசம், ஒரே தர அளவு’ திட்டமானது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
நாட்டின் உற்பத்திப் பொருளுக்குப் பல்வேறு நிறுவனங்கள் தர நிர்ணயம் செய்வதற்குப் பதிலாக ஒரே ஒரு தர நிர்ணயத்தை மட்டும் உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இது ‘இந்தியத் தரம்’ எனும் ஓர் அடையாளத்தைப் பிற்காலத்தில் நிலைநிறுத்த உதவும்.