ஒரு மூத்த வழக்கறிஞரான மகேஷ் ஜெத்மலானி அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான ஸ்வபன் தாஸ்குப்தா என்பவரை மாநிலங்களவையின் உறுப்பினராக நியமனம் (பரிந்துரை) செய்துள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர், மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களை நியமனம் செய்யலாம்.
மேலவையின் உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள் இலக்கியம், கலை, விளையாட்டு, அறிவியல் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளிலிருந்து தேர்வு செய்யப் படுவர்.