தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 2, 2025 அன்று மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்களைத் தொடங்கி வைத்தார்.
இது ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை சாந்தோமில் உள்ள செயிண்ட் பேட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுகாதாரத் துறை ஏற்பாடு செய்த தொடக்க நிகழ்வில் இதை அவர் துவக்கி வைத்தார்.
இது மக்களின் வீட்டு வாயிலுக்கு என்று சுகாதாரச் சேவையைக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 1,256 முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மேலும் இதில் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவை சிறப்பு மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பகுதிகள் மற்றும் பட்டியலின சாதி மக்கள் தொகை அதிகமாக உள்ள இடங்களில் செயல்படுத்தப் படுகிறது.
இந்த முகாம்களில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயாளிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர் முன்னுரிமை பெறுவார்கள்.
மத்திய அரசால் 2024 ஆம் ஆண்டிற்கான உறுப்பு தானத்திற்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விருது பெற்றது.