TNPSC Thervupettagam

“Red Teaming”- சிந்தூர் நடவடிக்கை

June 2 , 2025 8 days 43 0
  • முதன்முறையாக, சிந்தூர் நடவடிக்கையானது, அதன் செயல்பாட்டுத் திட்டமிடலின் ஒரு பகுதியாக "Red Teaming" என்ற கருத்தாக்கத்தினை அமல்படுத்தியது.
  • Red Teaming என்பது எதிரியின் மனநிலை, தந்திரோபாயங்கள் மற்றும் அதன் எதிர் நடவடிக்கை முறைகளை மிகவும் நன்கு அறிந்த நிபுணர்களின் ஒரு சிறிய குழுவைத் திட்டமிடல் செயல்பாட்டில் ஈடுபடுத்துவதை உள்ளடக்கியது.
  • இந்திய இராணுவம் ஆனது இந்தச் செயல்முறையினை ஒரு நிகழ்நேர நடவடிக்கையில் பரிசோதித்தது இதுவே முதல் முறையாகும்.
  • இந்தக் கருத்து ஆனது, நீண்ட காலமாக வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளின் (குறிப்பாக பனிப்போரில்) ஒரு முறைப்படுத்தப்பட்ட அங்கமாக இருந்து வருகிறது.
  • இந்திய இராணுவத்தில், இந்தக் கருத்தாக்கத்திற்கு மகாபாரதத்தில் பாண்டவர்களின் ஆலோசகரின் பெயரைக் கொண்டு 'விதுர் வக்தா' என்று பெயரிப்பட்டுள்ளது.
  • இந்திய இராணுவமானது ஏற்கனவே சிம்லாவை தலைமையிடமாகக் கொண்ட அதன் பயிற்சிக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்குள் (ARTRAC) ஒரு REDFOR (சிவப்புப் படைகள்) என்ற ஒரு பிரிவைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்