ஆயுஷ் அமைச்சகமானது, கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் “பிரயாஸ்” எனப்படும் அதன் முதல் வகையான ஒருங்கிணைந்த நரம்பியல் மறுவாழ்வு மையத்தினைத் தொடங்கியது.
10வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சரால் இந்த மையம் திறந்து வைக்கப்பட்டது.
“பிரயாஸ்” ஆனது ஆயுர்வேதம், உடலியக்க மருத்துவம், யோகா, பேச்சு சிகிச்சை, செயல்முறை மருத்துவம் மற்றும் குழந்தை நரம்பியல் மற்றும் மேம்பாட்டுப் பராமரிப்புக்கான நவீன குழந்தை மருத்துவத்தை ஒருங்கிணைக்கிறது.
நரம்பியல் சார்ந்த குறைபாடுகளை எதிர்கொள்ளும் குழந்தைகளை மையமாகக் கொண்டு முழுமையான, ஒருங்கிணைந்த மற்றும் ஆதார அடிப்படையிலான நரம்பியல் மறுவாழ்வை வழங்குவதே இந்த மையத்தின் நோக்கமாகும்.