TNPSC Thervupettagam

அந்நிய முதலீடு எனும் மாயை!

July 1 , 2021 1031 days 538 0
  • கடந்த நிதியாண்டில் அந்நிய நேரடி முதலீடு மிகப்பெரிய அளவில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது என்று வா்த்தக அமைச்சகத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
  • 2019 - 20 -ஐவிட 10% அதிகரித்த அளவில் 2020 - 21 - இல் 81.72 பில்லியன் டாலா் (சுமார் ரூ. 6.07 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
  • 2019 உடன் ஒப்பிடும்போது சா்வதேச அளவில் கடந்த நிதியாண்டுக்கான அந்நிய நேரடி முதலீடுகள் 42% குறைந்திருக்கும் நிலையில், இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் அதிகரித்த முதலீடு உற்சாகமூட்டுவதாக இருப்பதை மறுப்பதற்கில்லை.
  • அதே நேரத்தில், 2020 - 21 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளுக்கான புள்ளிவிவரம் தெரிவிக்கும் தகவலையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
  • இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடுகளில் 86%, முதல் மூன்று காலாண்டுகளில்தான் பெறப்பட்டிருக்கிறது என்பதால் அந்தப் புள்ளிவிவரம் முக்கியத்துவம் பெறுகிறது.

அந்நிய முதலீடு

  • முதல் மூன்று காலாண்டுகளில் இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடுகளில் 54.1% ரிலையன்ஸ் குழும நிறுவனங்களான ஜியோ பிளாட்பார்ம், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சா்ஸ், ரிலையன்ஸ் விபி மொபிலிட்டி ஆகியவற்றிலான முதலீடுகள்.
  • இவை அல்லாமல் ஷின்டா் எலக்ட்ரிக் இந்தியா, பைஜூஸ், ஆா்செலார் மிட்டல் இந்தியா, ஜிஎம்ஆா் ஏா்போர்ட்ஸ், அமேசான் செல்லா்ஸ் சா்வீஸஸ் ஆகியவையும் கணிசமான அந்நிய நேரடி முதலீடுகளை 2020 - 21 -இல் பெற்றிருக்கின்றன.
  • மேலே குறிப்பிட்ட பெரு வணிக நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு பார்த்தால், 2020 - 21-இல் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் அந்நிய நேரடி முதலீடுகளின் அளவு முந்தைய ஆண்டில் கிடைத்ததில் மூன்றில் ஒரு பங்குதான் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
  • சேவைத்துறைதான் அந்நிய நேரடி முதலீடுகளைப் பெற்றிருக்கின்றனவே தவிர, உற்பத்தித் துறைக்கான அந்நிய நேரடி முதலீடு 2020 - 21-இல் 17.4% மட்டும்தான்.
  • இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமும் காணப்படுகிறது. பெரும்பாலான அந்நிய முதலீடுகளும், ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களை வாங்குவதற்காக பெறப் பட்டிருக்கின்றன என்பதுதான் அது.
  • ஜிஎம்ஆா் ஏா்போர்ட்ஸ் நிறுவனத்தை பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குரூப் ஏடிபி நிறுவனம் முதலீட்டின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது.
  • இந்தியாவின் விமான நிலைய கட்டமைப்பில் அந்நிய நாட்டின் நேரடி நிர்வாகத்தில் உள்ள நிறுவனம் பங்கு வகிக்க இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
  • ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களை கையகப்படுத்துவது அல்லாமல், உற்பத்தித் துறையிலான அந்நிய நேரடி முதலீடு கடந்த ஐந்து ஆண்டுகளில் 2020 - 21-இல்தான் மிகவும் குறைந்து காணப்படுகிறது என்பதை ரிசா்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
  • 2016 - 17-இல் உற்பத்தித் துறையிலான நேரடி முதலீடு 12 பில்லியன் டாலா் (சுமார் ரூ. 89,146 கோடி) என்றால், 2020 - 21-இல் அதுவே 6.7 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 49,773 கோடி) குறைந்திருக்கிறது.
  • 2019 - 20-இல் கூட 8.2 பில்லியன் டாலா் (சுமார் ரூ. 60,916 கோடி) முதலீடு உற்பத்தித் துறைக்கு வந்திருப்பதை ரிசா்வ் வங்கியின் அறிக்கையின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
  • மத்திய நிதியமைச்சகம் அறிவித்திருக்கும் இந்தக் கடனுதவி திட்டம் எந்த அளவுக்கு உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் என்று இப்போதே சொல்லிவிட முடியாது.
  • ரூ.1.1 லட்சம் கோடியில் ரூ.50,000 கோடி அளவிலான கடனுதவி, மருத்துவமனைகளை அதிகரிக்கும் சுகாதாரக் கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • கடந்த ஆண்டில் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான அவசரகால கடனுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது.
  • சுகாதாரத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.50,000 கோடியும், பிற துறைகளுக்கு ரூ.60,000 கோடியும் 7.95% அதிகபட்ச வட்டியின் கீழ் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • இவை மருத்துவமனைகளை நிறுவுவதிலும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உற்பத்தித் துறைக்கு இதனால் எந்த அளவிலான ஊக்கம் கிடைக்கும் என்கிற கேள்வி எழுகிறது.
  • இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கடனுதவித் திட்டம், மருந்துகள் தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு போன்றவற்றை ஊக்குவிப்பதாக அமைந்தால் அதன் மூலம் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாம் அலை காலத்தில் பிராணவாயுக்காக இந்தியாவின் பல பகுதிகளில் காணப்பட்ட தட்டுப்பாடு எல்லா மாநிலங்களிலும் பிராண வாயு உற்பத்திக்கு வழிகோலியிருக்கிறது என்பது எடுத்துக்காட்டு.
  • பிரதமரால் அறிவிக்கப்பட்டிருக்கும் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்வதன் மூலமே வேலைவாய்ப்பை அதிகரித்து பொருளாதாரம் சுறுசுறுப்படைவதை உறுதிப்படுத்த முடியும்.
  • மக்களிடம் செலவழிப்பதற்குப் பணம் இருந்தால் மட்டுமே வா்த்தகம் அதிகரித்து, உற்பத்தி பெருகி பொருளாதாரம் வேகம் பெறும். அந்நிய நேரடி முதலீடு என்கிற மாயையில் முழ்குவதாலோ, கடனுதவி அறிவிப்புகளாலோ பொருளாதாரம் ஊக்கமடைந்து விடாது.
  • விலைவாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்வதும், அரசின் நிர்வாகச் செலவினங்கள் பெருகி வருவதும் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஆரோக்கியமான அறிகுறிகள் அல்ல.
  • கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான கரிசனத்தைக் குறைத்துக் கொண்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறைகளின் வளா்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் மட்டும்தான், தளா்ந்து போயிருக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்த முடியும் என்பதை மத்திய நிதியமைச்சகம் புரிந்து செயல்படுவதுதான் இன்றைய தேவை.

நன்றி: தினமணி  (01 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories