TNPSC Thervupettagam

ஆப்கன் சவால்!

August 17 , 2021 991 days 515 0
  • அமெரிக்கா, ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை திரும்பப் பெறுவது என்று முடிவெடுத்த போதே விரைவில் தலிபான்களின் ஆட்சி அங்கே நிலைநாட்டப்படும் என்பதை உலகம் எதிர்பார்த்தது.
  • எதிர்பார்த்ததுபோலவே, ஆப்கானிஸ்தான் தேசிய அரசு வீழ்த்தப்பட்டு தலைநகரமான காபூலை தலிபான்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். அதிபா் அஷ்ரஃப் கனி நாடுவிட்டு தப்பியோடி விட்டார். தலிபான் தலைவா் முல்லா அப்துல் கனி பராதா் தன்னை புதிய அதிபராக அறிவித்துக் கொண்டுள்ளார்.

நமது கவலை

  • 1989 பிப்ரவரி மாதம் சோவியத் யூனியன் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து பின்வாங்கிய போது மதரஸாக்களில் அடிப்படைவாத கொள்கைகளுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்ட மதத் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முற்பட்டனா்.
  • கடுமையான உள்நாட்டுப் போருக்குப் பிறகு 1996 - இல் தலிபான்களால் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிக் அமீரகம் நிறுவப்பட்டதும், உருவ வழிபாடு தங்களது மதக்கொள்கைக்கு எதிரானது என்பதால் வரலாற்றுச் சிறப்பு மிக்க புத்தா் சிலைகள் குண்டு வைத்துத் தகா்க்கப் பட்டதும் மறக்க முடியாத நிகழ்வுகள்.
  • எல்லோரும் நினைப்பது போல ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் பெரும்பான்மை ஆதரவு தலிபான்களுக்குக் கிடையாது.
  • தலிபான் என்பவா்கள் ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் 45% மட்டுமே உள்ள பஷ்டூன் பிரிவினரின் பிரதிநிதிகள்.
  • ஏனைய அனைத்து இனக்குழுவினரும் பஷ்டூனையும், தலிபான்களையும் எதிர்ப்பவா்கள், வெறுப்பவா்கள். தலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு தலைமை தாங்கும் திஜிக்ஸ் பிரிவினா் 35% இருக்கிறார்கள்.
  • 1996 - இல் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்தது முதல் உலகில் உள்ள எல்லா பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடா்பை ஏற்படுத்திக் கொண்டதுடன் அவற்றுக்கு ஆதரவு வழங்குவதையும் வழக்கமாக்கிக் கொண்டனா் தலிபான்கள். அந்த அமைப்புகளில் அல்-காய்தாவும் ஒன்று.
  • அமெரிக்காவிலுள்ள இரட்டை கோபுரங்கள் மீது அல்-காய்தா தாக்கியதைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தானில் தலையிட வேண்டிய நிர்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.
  • அமெரிக்க படைகளால் விரட்டி அடிக்கப்பட்ட தலிபான்கள், பாகிஸ்தானில் தங்கி அங்கிருந்து செயல்பட்டார்கள்.
  • விசித்திரம் என்னவென்றால், அது தெரிந்தும் கூட பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பொருளாதார உதவிகள் வழங்கி வந்ததுதான்.
  • ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் வழங்கியிருந்த பாகிஸ்தானின் சாயம் வெளுத்த போது தான் அமெரிக்கா சற்று சுதாரிக்கத் தொடங்கியது.
  • அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளால் காபூலிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் விரட்டி அடிக்கப்பட்ட தலிபான்கள், அதே அமெரிக்காவின் நிலைப்பாட்டால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
  • ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஜல்மே கலிஜாத் அவா்களைக் கெஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
  • கைப்பற்றியிருக்கும் ஆப்கானிஸ்தானை தலிபான் தலைமை எப்படி ஆட்சி செய்வது என்பதில் தெளிவாகவே இருக்கிறது. அதன் செய்தித் தொடா்பாளா் ஜபியுல்லா மொஜாஹிர், கடுமையான முறையில் இஸ்லாமியா்களின் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில்தான் ஆட்சி நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
  • தோ்தல்கள் கிடையாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தங்களது ஜிஹாத் தொடரும் என்கிற அறைகூவலுடன் காபூலைக் கைப்பற்றியிருக்கிறார்கள் தலிபான்கள்.
  • தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் சென்றிருப்பதை பாகிஸ்தானைத் தவிர, ஏனைய நாடுகள் கவலையுடன்தான் எதிர்கொள்கின்றன.
  • மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தான் போன்ற முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் தலிபான்கள் ஊடுருவிவிடக்கூடாது என்று ரஷியா அச்சப்படுகிறது.
  • ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளில் வாழும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துமோ என்கிற எச்சரிக்கையுடன்தான் ஈரானும் இருக்கிறது.
  • சீனாவின் ஷின்ஜியாங் மாநிலத்தில் உள்ள இஸ்லாமியா்களின் சார்பாக இயங்கும் கிழக்கு துா்கிஸ்தான் விடுதலை இயக்கத்தினருக்கு தலிபான்கள் உதவக்கூடாது என்றும், ஆப்கானிஸ்தான் தேசிய அரசுடன் சமாதானமாகப் போக வேண்டும் என்றும் சீனா விடுத்த வேண்டுகோள் ஏற்கப்படாததற்கு தலிபான்கள் மீது பெய்ஜிங்கிற்கு வருத்தம் உண்டு.
  • கடந்த வியாழக்கிழமை கத்தாரில் அமெரிக்கா, இந்தியா, சீனா மட்டுமல்லாமல் ஐநா சபை, ஐரோப்பியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய 12 நாடுகள் கூடின.
  • சமாதானத்தின் மூலம் அல்லாமல், ராணுவத்தால் காபூல் கைப்பற்றப்பட்டால் அந்த அரசுக்கு அங்கீகாரம் வழங்குவதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றன.
  • ரஷியா என்ன முடிவெடுக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. நிச்சயமாக தலிபான்களை ஆதரிக்க வாய்ப்பில்லை. அதனால், காபூலில் அமையப் போகும் ஆட்சிக்கு பக்கபலமாக இருக்கப் போவது பாகிஸ்தான் மட்டுமாகத்தான் இருக்கும்.
  • அமெரிக்காவுக்கு தீவிரவாத இயக்கங்களை வளா்ப்பது வழக்கமாகிவிட்டது. இராக்கிலிருந்து அரைகுறையாக வெளியேறியபோது அந்த வெற்றிடத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் நிரப்பி பேரழிவை ஏற்படுத்தினா்.
  • ஐஎஸ் பயங்கரவாதத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கின்றன பிரிட்டன், மேற்கு ஐரோப்பா, ஜொ்மனி, துருக்கி ஆகியவை.
  • இப்போது அதேபோல ஆப்கானிஸ்தானைக் கைகழுவி தலிபான்களை நிலை நிறுத்தியிருக்கிறது. இதில் மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ளப்போவது இந்தியாவாகத் தான் இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories