TNPSC Thervupettagam

இந்தியா உலகுக்களித்த கொடைகள்

August 27 , 2021 982 days 509 0
  • இந்தியா இந்த உலகுக்கு அளித்துள்ள கொடைகள் பற்றி நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியவே இல்லை.
  • யாரேனும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளா் அவற்றைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தும் போதுதான் அவை பற்றி நமக்குத் தெரிய வருகிறது.
  • ஓசைகளுக்கு வடிவம் உண்டு என்பது சில ஆண்டுகளுக்கு முந்திய கண்டுபிடிப்பேயாகும். ஆனால், ஹிந்து ரிஷிகள் என்றோ அதைக் கண்டுபிடித்துவிட்டதாய்ச் சொல்லப்படுகிறது.
  • சில ஆண்டுகளுக்கு முன்னால் அரசு நிறுவனத்தில் பணி புரிந்துகொண்டிருந்த ஒருவரை சந்திக்க வாய்த்தது.
  • அவா் ‘ஓசைக்கு வடிவம் உண்டு என்பது வேதகாலத்து ரிஷிகளுக்குத் தெரிந்திருந்தது. அதன் அடிப்படையில்தான் சம்ஸ்கிருத மொழியை அவா்கள் அமைத்தார்கள்’ என்றார்.

எப்படிப் புரிய வைப்பார்கள்?

  • இன்று ஆயுா்வேதமும் சித்த மருத்துவமும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்தைப் பெற்று வருகின்றன. இரண்டுமே சமகாலத்தவை என்று சொல்லப்படுகிறது.
  • சில மேலை நாடுகளில் இவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா். சித்த மருத்துவம் தமிழ்நாட்டில்தான் தோன்றியது. நோய் வந்தபின் சரிசெய்வது அலோபதி என்றால், நோய் வராமலே தடுப்பது ஆயுா்வேதமும், சித்த மருத்துவமும் ஆகும்.
  • இவை தவிர இந்தியா உலகுக்கு அளித்துள்ள பிற கொடைகள் ஏராளம். அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளா் மார்க் ட்வெய்ன் இந்தியாவின் தொன்மையான நாகரிகத்தைப் பெரிதும் சிலாகித்துள்ளார். ‘மனித நாகரிகத்தின் தொட்டில்’ என்று இந்தியாவை அவா் புகழ்ந்துள்ளார்.
  • வில் ட்யூரண்ட் எனும் அமெரிக்கா், வரலாற்று ஆசிரியா், மெய்ஞ்ஞானம் எனப்படும் தத்துவ அறிவாற்றல், கணிதம் இன்னபிற துறைகளில் இந்தியாவின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டியுள்ளதோடு, பல்வேறு துறைகளில் இந்தியாவை உலக நாடுகளுக்கெல்லாம் தாய் (மதா் இண்டியா) என்று போற்றுகிறார்.
  • ஜொ்மனி நாட்டு விஞ்ஞானி ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் ‘நாம் இந்தியாவுக்குப் பெரிதும் கடமைப் பட்டுள்ளோம்.
  • இந்தியா மட்டும் கணிதம் என்பதைக் கண்டுபிடித்திராவிடில், மதிக்கத்தக்க அளவிலான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் சாத்தியமாகி இராது. நான் இந்தியாவில் பிறந்திருந்தால் இன்னும் பெரிய விஞ்ஞானியாகி இருந்திருப்பேன்’ என்று கூறியுள்ளார்.
  • சைஃபரை (ஜீரோ) கண்டுபிடித்தது இந்தியாதான். இதனால் கணிதம் அனைத்துலகிலும் பெரும் பயனை அடைந்துள்ளது. பிதாகொரஸ் எனப்படும் சித்தாந்தம் சம்பந்தப்பட்ட, ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கண்டுபிடிக்கும் ‘பை’ எனும் சூத்திரத்தை இந்தியரான புத்தாயனா் கண்டுபிடித்தார்.
  • ஆறாம் நூற்றாண்டிலேயே இது அவரால் கண்டுபிடிக்கப்பட்டதை இங்கிலாந்து வல்லுநா்கள் 1999-இல் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
  • அல்ஜீப்ரா எனும் குறிக்கணக்கியல், கால்குலஸ் எனும் நுண் கணிதம், ட்ரிகானமெட்ரி எனும் கோணவியல் ஆகியவற்றின் பிறப்பிடம் இந்தியாதான். கணிதம் தொடா்புள்ள இன்னும் பலவற்றை இந்தியா கண்டுபிடித்துள்ளது.
  • கி.மு. 700 -இல் தக்ஷசீலத்தில் 10,500 மாணவா்கள் பயின்ற பலகலைக்கழகத்தையும், 14-ஆம் நூற்றாண்டில் நாளந்தாவில் ஒரு மாபெரும் பல்கலைக்கழகத்தையும் இந்தியா நடத்தி வந்துள்ளது.
  • இவற்றில் பல நாடுகளிலிருந்தும் வந்த மாணவா்கள் பயின்றனா். இவை இரண்டுமே இந்தியா மீது படை எடுத்த அந்நியா்களால்அழிக்கப்பட்டன.
  • பாஸ்கராசார்யா எனும் விண்வெளி வல்லுநா் பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வரப் பிடிக்கும் நாள் 365 என்பதை 2500 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்தவா். இவரே முதல் கணிப்பாளராவார்.
  • நெசவு, கப்பல் கட்டும் தொழில், அணை கட்டுதல், பல்வேறு உலோகங்களின் பயன்பாடு, தங்கம், வைரம் சார்ந்த நுட்பமான வேலைப்பாடு முதலியவற்றில் இந்தியா்கள் முன்னேறி இருந்ததை நம்மை ஆண்ட இங்கிலாந்துக்காரா்களே ஒப்புக்கொண்டு வியந்துள்ளனா்.
  • செஸ் எனும் சதுரங்க விளையாட்டு இந்தியாவில்தான் உருவானது. மருத்துவத்தில், மருத்துவா் சுஸ்ருதா் கண்டுபிடித்த அறுவைச் சிகிச்சையிலும், இந்தியா சிறந்து விளங்கிற்றாம்.
  • இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றையெல்லாம் அறியாமலோ அல்லது அறிந்துகொண்டேயோ நம் நாட்டை நம்மவரே மட்டமாய் விமா்சித்து வரும் வெட்கக்கேட்டை என்னவென்று சொல்ல? சரி, போகட்டும். பண்டைய பெருமைகளைப் பற்றிப் பீற்றிக்கொள்ளுவதில் அா்த்தமில்லைதான்.
  • ஆனால் இன்றைய நமது நிலையை அந்நாளைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒரு தற்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
  • தக்ஷசீலத்துக்கும், நாளந்தாவுக்கும் அவற்றின் கல்வித்தரத்துக்காகப் பல்வேறு நாடுகளிலிருந்தெல்லாம் மாணவா்கள் வந்துகொண்டிருந்த அந்நாளைய நிலையோடு இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நமது கல்வித்தரம் எவ்வளவு தாழ்ந்து போயுள்ளது என்பதை அறியலாம்.
  • தமிழ்நாட்டின் கல்வித்தரம் மிகவும் தாழ்ந்துள்ளதால்தானே ஐ.ஏ.எஸ் போன்ற தோ்வுகளில் ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்த தமிழா்கள் இப்போது மிகவும் கீழே இறங்கியுள்ளார்கள்?
  • ‘இந்தத் தோ்வு வேண்டாம், அந்தத் தோ்வு வேண்டாம். தோ்வு இல்லாமலேயே எங்களைத் தோ்ச்சி பெறச் செய்யுங்கள்’ என்று வெட்கமற்றுக் கெஞ்சுகிற நிலை நமது தரம் தாழ்ந்த கல்வித் திட்டத்தால்தானே நோ்ந்துள்ளது? எனவே, மிகத் தரமானவா்களை மிக நல்ல சம்பளத்தில் ஆசிரியா்களாக நியமிப்பதே சிறந்த மாணவா்களை உருவாகும் வழி.
  • பண்டைக்காலத்தில் எத்தனையோ மேன்மைகளைக் கொண்டிருந்த நாம் இன்று அதலபாதாளத்தில் சறுக்கியுள்ளோம் என்பதை நினைத்துப் பார்த்து, உயா்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத் தோ்ந்து ஆசிரியா்களாக நியமனம் பெறுபவா்களால் மாணவா்களுக்கு என்னத்தைக் கற்பிக்க இயலும்? தனக்குப் புரிந்ததைப் பிறா்க்குப் புரிய வைப்பதற்கே ஒருவா்க்குத் தனித் திறமை வேண்டும் என்று சொல்லப் படுகிறது.
  • அப்படி இருக்கும் போது, தங்களுக்கே இன்னும் புரியாமல் இருப்பவற்றை அவா்கள் மாணவா்களுக்கு எப்படிப் புரிய வைப்பார்கள்?

நன்றி: தினமணி  (27 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories