TNPSC Thervupettagam

உ‌ண்மை தெரி‌ஞ்சாகணு‌ம் - கரோனா தீநுண்மி குறித்த தலையங்கம்

November 29 , 2021 902 days 459 0
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்​தொற்று இப்​போ​தைக்கு முடி​வுக்கு வரும் என்று தோன்​ற வில்லை.
  • நாளும் பொழு​தும் உரு​மாற்​றம் பெற்​றுக் கொண்​டி​ருக்​கும் அந்​தத் தீநுண்மி, "ஒமைக்​ரான்' என்கிற பெய​ரில் புதிய அவ​தா​ரம் எடுத்து ஒட்டு​மொத்த உல​கத்​தை​யும் அச்​சு​றுத்​திக்​கொண்​டி​ருக்​கி​றது.
  • மீண்​டும் பொது​மு​டக்​கம், புதிய தடுப்​பூசி கண்​டு​பி​டிப்பு என்​றெல்​லாம் தேவைப்​பட்​டால் அவற்றைத் தாங்​கும் சக்தி உல​குக்கு இருக்​கி​றதா என்​பது சந்​தே​கம்​தான்.
  • நவம்​பர் மாதம் முடி​வ​டைய இருக்​கி​றது. இரண்​டாண்​டு​க​ளுக்கு முன்பு இதே​போல ஒரு நவம்​பர் மாதத்​தில்​தான் சீனா​வின் ஹ்யு​பெய் மாகா​ணத்​தின் தலை​ந​க​ரான வூஹான் நகர பரிசோதனைச் ​சா​லை​யில் பணி​பு​ரி​யும் மூன்று ஆராய்ச்​சி​யா​ளர்​கள் தங்​களை பாதித்த நோய்த்​ தொற்​றுக்கு சிறப்பு மருத்​து​வம் கோரி​னார்​கள். அப்​போ​து​தான் புதி​ய​தொரு தீநுண்மி உரு​வெ​டுத்​தி​ருப்​பது தெரிந்​தது.
  • கடந்த இரண்டு ஆண்​டு​க​ளாக கொவைட் 19 என்று பெயர் சூட்டப்​பட்ட அந்​தத் தீநுண்மி, கோடிக்​க​ணக்​கான மனி​தர்​க​ளை​யும் அவர்​தம் வாழ்​வா​தாரங்​க​ளை​யும் நிலை தடு​மாற வைத்து இன்னும்​ கூட தனது கோர​தாண்​ட​வத்தை நிறுத்​தா​மல் தொடர்​கி​றது.

கரோனா தீநுண்மி

  • கடந்த இரண்டு ஆண்​டு​க​ளில் 24.5 கோடி பேர் கொவைட் 19 தீநுண்​மி​யால் பாதிக்​கப்​பட்டு மூச்சுத் திண​றி​யி​ருக்​கி​றார்​கள். ஐம்​பது லட்சத்​துக்​கும் அதி​க​மா​னோர் உயி​ரி​ழந்​தி​ருக்​கி​றார்​கள்.
  • கோடிக்​க​ணக்​கா​னோர் வாழ்​வா​தா​ரம் இழந்து நிலை​கு​லைந்து போயி​ருக்​கி​றார்​கள். உலக வங்கி​யின் கணக்​குப்​படி, ஏறத்​தாழ 12 முதல் 13 கோடி பேர் கடு​மை​யான வறுமை நிலைக்​குத் தள்​ளப்​ பட்​டி​ருக்​கி​றார்​கள்.
  • லட்சக்​கணக்​கா​னோர் தங்​கள் வருங்​கா​லம் குறித்து தெரி​யாத நிலை​யில் தொடர்​கி​றார்​கள்.
  • தடுப்​பூசி கண்​டு​பி​டிக்​கப்​பட்டு, பணக்​கார நாடு​க​ளில் பெரும்​பாலான மக்​க​ளுக்கு முதல் தவணை​யும் இரண்​டாம் தவ​ணை​யும் தடுப்​பூசி போடப்​பட்​டி​ருக்​கி​றது. வளர்ச்​சி​ய​டைந்த எல்லா நாடு​க​ளி​லும் முன்​க​ளப் பணி​யா​ளர்​கள் அனை​வ​ருக்​கும் தடுப்​பூசி போடப்​பட்டிருக்கிறது.
  • 100 கோடிக்​கும் அதி​க​மான தடுப்​பூசி போட்டு இந்தியா சாதனை படைத்​தி​ருக்​கி​றது என்று பெரு​மி​தப்​ப​டு​கி​றோம். ஆனால், உல​கில் பெரும்​பா​லான நாடு​க​ளில் முன்​க​ளப் பணியாளர்களுக்குக் ​கூட  தடுப்​பூசி போடப்​ப​டாத நிலை​தான் காணப்​ப​டு​கி​றது.
  • உலக சுகா​தார நிறு​வ​னத்​தின் கோரிக்​கை​க​ளை​யும், ஐ.நா. பொதுச்​செ​ய​லா​ள​ரின் அறை​ கூவலை​யும் வல்​ல​ரசு நாடு​கள் இப்​போ​தும்​கூட சட்டை செய்​ய​வில்லை.
  • வளர்ச்​சி​ய​டை​யும் சின்​னஞ்​சிறு நாடு​கள் குறித்​தும், அங்​கெல்​லாம் ஏழ்​மை​யில் வாடும் மக்களின் பாது​காப்பு குறித்​தும் வல்​ல​ரசு நாடு​கள் கவ​லைப்​ப​ட​வில்லை என்​கிற அவ​லம், மனி​த​குல வர​லாற்​றில் மிகப்​பெ​ரிய கறை​யா​கத் தொட​ரப்​போ​கி​றது.
  • இத்​தனை நடந்​தும்​கூட, தீநுண்​மித் தொற்​றுக்​குக் கார​ண​மான சீனா, வெளிப்​ப​டை​யாக எந்த உண்​மை​யை​யும் தெரி​விக்​கத் தயா​ராக இல்லை. சீனா​வின் இப்​போ​தைய நிலை என்ன என்​ப​து​கூ​டப் புதி​ராக இருக்​கி​றது.
  • அங்கே மீண்​டும் பர​வத் தொடங்​கி​யி​ருக்​கும் நோய்த்​தொற்​றால் பெரிய துறை​மு​கங்​கள் அனைத்​தும் மூடப்​பட்​டி​ருக்​கின்​றன. கடந்த மாதம் ஹ்யு​பெய்​யி​லும் பெய்​ஜிங்​கி​லும் நடக்க இருந்த மாரத்​தான் ஓட்டங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன.
  • பதி​னொரு மாகா​ணங்​க​ளில் டெல்டா உரு​மாற்ற தீநுண்மி பர​வி​யி​ருப்​ப​து​தான் அதற்கு காரணம் என்று கூறப்​ப​டு​கி​றது.
  • இவை​யெல்​லாம் மூடி மறைக்​கப்​ப​டு​கின்​ற​னவே தவிர வெளி​யு​ல​கு​டன் பகிர்ந்து கொள்​ளப்​படுவ​தில்லை.
  • அத​னால் எந்த அள​வுக்கு உலக வர்த்​த​கத்​தை​யும் பொரு​ளா​தா​ரத்​தை​யும் சீனா​வின் இப்போதைய கொள்ளை நோய்த்​தொற்​றுப் பர​வல் பாதிக்​கும் என்று கணிக்க முடி​ய​வில்லை.
  • கடந்த மாதம் இத்​தா​லி​யின் ரோம் நக​ரத்​தில் ஜி20 நா​டு​க​ளின் தலை​வர்​கள் கூடிப் பேசி​னார்​கள்.
  • கடந்த 100 ஆண்​டு​க​ளில் இல்​லாத அள​வி​லான கொள்ளை நோய்த்​தொற்று உலகை பாதித்திருக்கும் நிலை​யில், அது​கு​றித்த கவ​னம் காணப்​ப​ட​வில்லை.
  • ஜி20 என்​பது சாதா​ர​ண​மான அமைப்பு அல்ல. உலக ஜிடி​பி​யில் 80% ஐ உள்​ள​டக்​கி​யது. 60% மக்கள் ​தொ​கையை பிர​தி​ப​லிப்​பது. உலக வர்த்​த​கத்​தில் 75% க்கு கார​ண​மா​னது.
  • சமீ​பத்​திய ஜி20 உச்சி மாநாடு கூடிய நாடான இத்​தாலி கொள்ளை நோய்த்​தொற்​றால் மிக அதிக​மாக பாதிக்​கப்​பட்ட நாடு​க​ளில் ஒன்று.
  • அப்​ப​டி​யி​ருந்​தும்​கூட, கொவைட் 19 குறித்​தும், அதன் பாதிப்​பு​கள் குறித்​தும், அது உரு​வா​ன​தன் கார​ணம் குறித்​தும் அந்த மாநாட்​டில் விரி​வாக விவா​திக்​கப்​ப​டா​தது விசித்​தி​ர​மாக இருக்​கி​றது.
  • இத்​தாலி மட்டு​மல்ல, சீனா​வைத் தவிர ஜி20 அ​ணி​யி​லி​ருக்​கும் ஒவ்​வொரு நாடும் கொவைட் 19 கொள்ளை நோய்த்​தொற்​றால் மிகப்​பெ​ரிய பொரு​ளா​தா​ரப் பின்​ன​டைவை எதிர்​கொள்​கி​றது என்று சர்​வ​தேச நிதி​ய​மும், உலக வங்​கி​யும் வெளி​யிட்​டி​ருக்​கும் புள்​ளி​வி​வ​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.
  • அமெ​ரிக்கா உள்​பட, சீனாவை தவிர்த்து ஏனைய 19 நாடு​க​ளும் கடந்த ஓராண்​டில் 2.5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.188 லட்​சம் கோடி) அள​வி​லான பொரு​ளா​தா​ரப் பின்​ன​டைவை எதிர்​கொண்​டி​ருக்​கின்​றன.
  • 2020 இல் சீனா​வின் ஜிடிபி 400 பில்​லி​யன் டாலர் (சுமார் ரூ.30 லட்​சம் கோடி) அதி​க​ரித்து ஏறுமுகமாகக் காணப்​ப​டு​கி​றது. இது குறித்​தும் அவர்​கள் பெரி​தாக விவா​திக்​க​வில்லை.
  • கொவைட் 19 தீநுண்​மித் தொற்​றின் தொடக்​கம் குறித்​தும், பர​வல் குறித்​தும் இரண்டு ஆண்​டு​கள் கடந்​தும்​கூட எந்​த​வித ஆக்​க​பூர்​வ​மான விசா​ர​ணையோ, ஆய்வோ நடத்​தப்​ப​டா​மல் இருப்பது ஆச்​ச​ரி​யப்​ப​டுத்​து​கி​றது.
  • அது குறித்து வெளி​யான 300 பக்க அறிக்​கை​யில், பரி​சோ​த​னைச்​சாலை விபத்​தாக இருக்​க​லாம் என்று நான்கு பக்​கங்​க​ளில் காணப்​ப​டு​கின்​றன என்​ப​தைத் தவிர வேறு தக​வல்​கள் இல்லை.
  • எங்​கி​ருந்து, எப்​படி உரு​வாகி, எப்​ப​டிப் பர​வி​யது என்​ப​தைக் கண்டு​பி​டிக்​கா​மல் நாளும் பொழுதும் உரு​மாறி புதுப்​புது வடி​வ​மும், அதி​க​ரித்த வீரி​ய​மும் பெறும் தீநுண்​மி​யைத் துரத்​திக் கொண்​டி​ருப்​ப​தால் என்ன பயன் ஏற்​பட்​டு​வி​டும்? ஒமைக்​ரா​னுக்கு அடுத்த உருமாற்றத்​துக்​கும் இப்​போதே பெயர் கண்​டு​பி​டிப்​பது நல்​லது!

நன்றி: தினமணி  (29 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories