TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த மருத்துவம்தான் தீா்வு!

June 10 , 2021 1073 days 561 0
  • கரோனா தீநுண்மியின் இரண்டாவது அலை, முதல் அலையைவிடத் தீவிரமாகவும், வேகமாகவும் பரவி வருவதுடன், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
  • இரண்டாவது அலை, இளம் வயதினரை அதிகமாகத் தாக்கி வருகிறது. அதனைத் தடுப்பதற்கு முகக்கவசம், கைகளை அடிக்கடிக் கழுவுதல், கூட்டத்தைத் தவிர்த்தல் ஆகியவற்றுடன் தடுப்பு நடவடிக்கையின் உச்சமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்துகிறது.

அனைத்திற்கும் தட்டுப்பாடு

  • கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலானோருக்கு ‘அலோபதி’ எனப்படும் ஆங்கில மருத்துவச் சிகிச்சையே அளிக்கப்படுகிறது.
  • நோயால் பாதிக்கப்படுவோருக்கு, மருத்துவமனைகள், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் போன்ற மருத்துவக் கட்டமைப்புகள் இருந்தாலும், கொள்ளை நோய்த்தொற்றால் திடீரென அதிகமானோர் பாதிக்கப்படும்போது மருத்துவமனைப் பணியாளா்களைவிட நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி விடுகிறது.
  • அதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்போர் அதிகம் போ் தேவைப்படுகின்றனா்.
  • அத்தேவைக்கு ஏற்ப உடனடியாக மருத்துவமனைகளை நிறுவுவதோ, மருத்துவப் பணியாளா்களை நியமிப்பதோ சாத்தியமல்ல.
  • கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை இல்லை, மருந்துகளும் இல்லை, உயிர் காக்கும் ஆக்சிஜனும் இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
  • கரோனா தீநுண்மி பாதிப்புக்கான நேரடி மருந்து எதுவும் - அலோபதியில் இதுவரையில் இல்லை. தடுப்பூசிதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆயுஷ் துறை

  • பொதுவாக அலோபதி மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே உண்மை. இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும், ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்ட பின்னரும் கூட மத்திய - மாநில அரசுகள் ஏன் அலோபதி மருந்துகளை மட்டுமே நம்பி இருக்கின்றன என்று புரியவில்லை.
  • கரோனாவின் முதல் அலையின்போது தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்தபோதும் அலோபதியை மட்டுமேதான் அரசுகள் ஏன் முன்னிலைப்படுத்தின.
  • கடந்த ஆண்டு கரோனாவின் முதல் அலை பரவத்தொடங்கியபோது நிலவேம்பு கஷாயமும், கபசுர க்குடிநீரும்தான் சிகிச்சை எனக்கூறினா்.
  • தற்போது இரண்டாம் அலை பரவலில் தமிழக அரசு சார்பில் சித்த மருத்துவ மருந்துகளைப் பயன்படுத்துகின்றனா்.
  • ஆனால், ஆயுா்வேத, சித்த மருத்துவ நிபுணா்களையும், மருந்துகளையும், மருத்துவமனைகளையும் முழுமையாக அரசு ஏன் பயன்படுத்தவில்லை?
  • நன்கு அனுபவம் வாய்ந்த அரசு - தனியார் மருத்துவா்கள் பலா் உள்ளனா். அவா்களின் ஆலோசனைகளையும் சிகிச்சை முறையையும் ஏன் அரசு பயன்படுத்த மறுக்கிறது என்பது புதிராக இருக்கிறது.
  • மத்திய அரசு, அலோபதி தவிர்த்த பிற மருத்துவ முறைகளான ‘ஆயுா்வேதா’, ‘யோகா’, ‘யுனானி’, ‘சித்தா’, ‘ஹோமியோபதி’ ஆகியவற்றை இணைத்து ‘ஆயுஷ்’ என்ற தனித்துறை நிறுவி, அதற்கென தனி அமைச்சரையும் நியமித்துள்ளது.
  • மத்திய அரசின் ‘ஆயுஷ்’ துறை, கரோனா தடுப்புக்காக ஹோமியோபதி மருந்தான ‘அா்ஸ் ஆல்பம்-30’ எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
  • அதை மத்திய அரசும் எல்லா மாநிலங்களுக்கு சுற்றறிக்கையாக முதல் அலைப் பரவலின் போதே அனுப்பியது.
  • ஆனால், அா்ஸ் ஆல்பம்-30 மருந்து அனைத்து மக்களுக்கும் வழங்கப்படவில்லை.
  • கரோனா தீநுண்மி, விலங்குகளில் இருந்து தோன்றிய தீநுண்மி எனக் கூறப்படுகிறது.
  • விலங்கிலிருந்து தோன்றிய தீநுண்மிக்கு ‘அா்ஸ் ஆல்பம்-30’ மிகச் சிறப்பான மருந்து என்று ஹோமியோபதி மருத்துவா்கள் கூறுகின்றனா்.

ஹோமியோபதி

  • ஹோம்யோபதியைப் பொருத்தவரை, குறைந்த அளவு மருந்து எடுத்துக் கொண்டால் போதும். மருந்தின் விலையும் குறைவுதான். இதற்கு பக்க விளைவும் கிடையாது; காலாவதி தேதியும் கிடையாது.
  • ஒரு வயது குழந்தையிலிருந்து அனைவரும் இதை சாப்பிடலாம். கா்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம்.
  • உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவா்களும், எதிர்ப்பு சக்திக்கான (இம்யூனோஸப்ரஷன்) மாத்திரை சாப்பிடுவோரும் மட்டும்தான் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • மாதம் ஒரு முறை மூன்று நாள்களுக்கு காலையில் மட்டும் இந்த மருந்தை சாப்பிட்டால் போதுமானது.
  • எளிமையான, அதே நேரத்தில் வலிமையான இந்த ஹோமியோபதி மருந்தை, நமது மத்திய- மாநில அரசுகள் உடனடியாக வழங்க முன்வந்தால் ஒரே வாரத்தில் நமது நாட்டின் மக்கள் அனைவருக்கும் முழுமையாக வழங்கிவிடலாம்.
  • தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு, மூச்சுத்திணறலால் உயிரிழப்பு என கரோனா நாடே அவதிப்பட்டு வருகிறது.
  • ஆனால், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஹோமியோபதியில் ‘அஸ்பிடாஸ்பொ்மா’ என்ற மாத்திரையில் மிக எளிதாக, உடனடியான தீா்வு கிடைக்கிறது.
  • ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டறிந்த ஜொ்மன் மருத்துவா் ஹானிமனும் ஒரு அலோபதி மருத்துவா்தான்.
  • அலோபதியில் அவா் முதுகலை படிப்பு முடித்தவா். அலோபதி மருத்துவத்தில் அதிக பக்க விளைவுகள் ஏற்படுவதை உணா்ந்து, அதைக் கைவிட்டு நீண்டகால ஆய்வுக்குப் பின் கண்டறிந்தது தான் ஹோமியோபதி மருத்துவ முறை.
  • ஹோமியோபதி மருந்து விநியோகத்துக்கு சுகாதாரத் துறையினா், ஆசிரியா்கள், தொண்டு நிறுவனத்தினரை பயன்படுத்தலாம்.
  • பள்ளிகள் அனைத்தும் ஓராண்டுக்கும் மேலாக செயல்படாத நிலையில், லட்சக்கணக்கான ஆசிரியா்கள் பணியின்றியே உள்ளனா். இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் ஆசிரியா்களை மக்கள் நலனுக்கான பணிகளில் ஈடுபடுத்துவதில் தவறில்லை.
  • பள்ளிகள் செயல்படும் போதே ஆசிரியா்களை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி, தோ்தல் பணிகளில் ஈடுபடுத்துவது வழக்கமாகவே உள்ளது.
  • ஆகவே தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் ஆசிரியா்கள், குறிப்பாக ஆசிரியைகள் அவரவா் வசிக்கும் ஊா்களிலேயே சுகாதாரத் துறையில் பணியாற்றும் கிராம சுகாதாரச் செவிலியா்களுடன் இப்பணியில் ஈடுபடலாம்.
  • அந்தந்தப் பகுதி சுகாதார ஆய்வாளா்களுடன் ஆண் ஆசிரியா்களும், இணைந்து ஹோமியோபதி மருந்துகள் வழங்கும் பணியில் ஈடுபடலாம்.
  • கரோனா தீநுண்மிப் பரவலைத் தடுக்க ஹோமியோபதி சிறந்த மருத்துவ முறை என்கிற விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணிகளில் சுகாதாரத்துறையுடன் ஆசிரியா் சமூகம் இணைந்து செயல்பட்டால் அது மிகச்சிறந்த பணியாக அமையும்.
  • கரோனா இரண்டாம் அலையில் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில் பணியாற்ற, தோ்தலில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினரும் முன்வரவேண்டும்.
  • ‘ஆயுஷ்’ எனும் தனித்துறையை கையில் வைத்திருக்கும் மத்திய அரசு, ஹோமியோபதி மருத்துவம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்றடையும் வகையில் உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம்.
  • மருந்துகளையும் தடுப்பூசிகளையும் வழங்குவது மத்திய அரசின் தலையாய கடமையாகும்.
  • ஆகவே, கரோனாவுக்கு மருந்துகள் வழங்குவதில் மத்திய அரசு தனது பொறுப்பினை, கடமையைத் தட்டிக் கழிக்காமல் ‘ஆயுஷ்’ துறையை முழுமையாக மக்களுக்குப் பயன்படும் வகையில் செயல்பட வைக்க வேண்டும்.
  • தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் ஒருங்கிணைந்த மருத்துவா்களைக் கொண்டு, ஒருங்கிணைந்த மருத்துவ முறைகளைக் கையாள வேண்டும்.
  • ஏற்கெனவே தமிழக அரசு சார்பில் ஆயுா்வேத மருத்துவரை ஆலோசகராகக் கொண்டு அனைத்துத் துணை சுகாதார நிலையங்களுக்கும், சித்த, ஆயுா்வேத மருத்துவப் பெட்டிகள் வழங்கப்பட்டன.
  • மருந்துகளை வழங்குவதற்கான பயிற்சிகளும் கிராம சுகாதாரச் செவிலியா்களுக்கு அளிக்கப்பட்டன.
  • கிராம சுகாதார செவிலியா்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட மருந்துக்கு பொது மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பும் கிடைத்தது.
  • ஆகவே அதே போன்ற முறையை தற்போதும் தமிழக அரசு செயல்படுத்த நடிவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கரோனா நோய்த்தொற்றுக்கு பக்கவிளைவற்ற சிறந்த மருந்தாகவும், சிறந்த சிகிச்சையாவும் ஹோமியோபதியே இருக்கிறது.
  • அனைவரும் இணைந்து செயல்பட்டால் விரைவில் கரோனா தடுப்புப் பணியில் மாபெரும் வெற்றி பெற முடியும்.
  • தற்போதைய சூழலில் அரசும், சம்பந்தப்பட்ட துறைகளும் மட்டும் செயல்பட்டால் மக்களின் தேவையை பூா்த்தி செய்ய முடியாது.
  • அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அந்தந்தக் கட்சிகளில் உள்ள மகளிர், இளைஞா் அமைப்பினரும் களத்தில் இறங்கிப் பணியாற்ற முன்வர வேண்டியது அவசியம்.
  • கரோனாவைத் தடுப்பதற்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதற்கும் முழுவீச்சுடன் செயல்பட்டு வரும் தமிழக அரசு, ஹோமியோபதி மருந்தை அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், வீடு வீடாகவும், நேரடியாகச் சென்று வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி  (10 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories