A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/var/lib/php/sessions/ci_sessionga1a21eb6egm85e0g6459k6mcfjm4trd): failed to open stream: No space left on device

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 174

Backtrace:

File: /var/www/html/application/controllers/sitecontrol/Articles.php
Line: 19
Function: __construct

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /var/lib/php/sessions)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /var/www/html/application/controllers/sitecontrol/Articles.php
Line: 19
Function: __construct

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

சென்னைக்கு வெளியிலும் ‘மூன்றாவது கண்’ திறக்கட்டும்
TNPSC Thervupettagam

சென்னைக்கு வெளியிலும் ‘மூன்றாவது கண்’ திறக்கட்டும்

October 12 , 2021 948 days 563 0
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன கைக்குழந்தை கடத்தப்பட்டு, ஒரே நாளில் மீட்கப்பட்டது.
  • மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் பதிவுகளிலிருந்து குழந்தையைக் கடத்தியவரை உடனடியாக அடையாளம் காண முடிந்தது.
  • அதே மாவட்டத்தில், மருந்தகம் ஒன்றில் மருத்துவரின் பரிந்துரையின்றி தூக்க மாத்திரைகள் கேட்டு அரிவாளைக் காட்டிக் கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்களும் சிசிடிவி காட்சிப் பதிவுகளின் துணையோடு உடனடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
  • உயிருக்கும் உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்கும் குற்றங்களையும் அக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களையும் கண்டறிவதில் சிசிடிவி காட்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன.
  • குற்றவாளிகளைக் கண்டறிய உதவுவதோடு குற்றம் நடந்ததற்கான சாட்சியமாகவும் விளங்குகின்றன. இந்நிலையில், சென்னை பெருநகரக் காவல் துறையால் ஓர் இயக்கமாகவே முன்னெடுக்கப்பட்ட ‘மூன்றாவது கண்’ தமிழ்நாடு முழுவதும் விரிவுபெற வேண்டியது அவசியம்.
  • சென்னை மாநகரத்தின் ஆணையராக நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன், அனைத்து பொதுக் கட்டிடங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதைக் கட்டாயமாக்கினார்.
  • தன்னுடைய பணிக்காலத்தில் மாநகராட்சி எல்லைக்குள் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். இதன் உடனடி விளைவாக சங்கிலிப் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற வழிப்பறித் திருட்டுகள் கட்டுப்படுத்தப்பட்டன.
  • சிசிடிவி கேமரா கண்காணிப்பு, குற்றங்களைக் கண்டறிய உதவுகிறது என்பதோடு குற்றங்கள் நடக்காமல் இருக்கவும் உதவுகிறது.
  • சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு உள்ள பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
  • சென்னையில் சிசிடிவி பொருத்துவதற்குக் காவல் துறை காட்டிவந்த தீவிர முனைப்பு கரோனா முன்தடுப்புப் பணிகளால் சற்றே குறைந்திருக்கிறது. மீண்டும் அது தீவிரம் பெற வேண்டும்.
  • சிசிடிவி கண்காணிப்பு வலைப் பின்னலைப் பொறுத்தவரையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி அதனை முழுமையாகச் செயல்படுத்த முடியாது. அதற்கான செலவுகளைப் பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரையில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள வணிகர் சங்க அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஆகியவையும் சிசிடிவி பொருத்துவதற்கான செலவுகளை ஏற்றுள்ளன.
  • சென்னைக்கு வெளியே மற்ற நகரங்களிலும் இத்தகைய அமைப்புகளின் உதவியோடு ‘மூன்றாவது கண்’ இயக்கத்தை விரிவுபடுத்த முடியும். உள்ளாட்சி அமைப்புகளும் இதில் பங்கெடுக்கலாம்.
  • குற்றம் நடந்த பிறகு, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆராய்வது விசாரணையின் ஒரு பகுதியாகவே இன்று மாறிவிட்டது.
  • அதே நேரத்தில், ஒவ்வொரு பகுதியிலும் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளைத் தொடர்ந்து கண்காணித்துவருவது குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கவும் உதவும்.
  • சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதில் காட்டப்படும் வேகம், பழுதடைந்தவுடன் சரி செய்வதிலும் காட்டப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories