பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது அக்னி P எனும் அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக் கூடிய புதிய ரக உந்துவிசை வகை ஏவுகணையினை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
இந்த ஏவுகணையானது ஒடிசா கடற்கரை அருகே அமைந்த டாக்டர் A.P.J. அப்துல்கலாம் தீவிலிருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டது.
இது அக்னி-I மற்றும் அக்னி-II ஏவுகணைகளின் வழித்தோன்றல்களாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்ட நடுத்தர வரம்புடைய உந்து விசை ஏவுகணையாகும்.
இது உந்து விசை ஏவுகணைகளுக்கான அக்னி வரிசையில் 6வது ஏவுகணையாகும்.