TNPSC Thervupettagam

அசாமில் யானைகள் வாழிட மீட்பு

September 1 , 2026 12 days 100 0
  • ஆக்கிரமிப்புத் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் பயோச்சார் (biochar) எனப்படும் உயிரி அடுப்புக்கரியைப் பயன்படுத்தி யானைகளின் வாழிடத்தை மீட்டெடுப்பதற்காக அசாமின் உடல்குரி மாவட்டத்தில் உள்ள காலிங்துவார் காப்புக் காட்டில் இரண்டு ஹெக்டேர் பரப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • சீரழிந்த வாழிடங்களை மீட்டெடுக்கவும் மற்றும் பூர்வீக தாவரங்களை அதிகரிக்கவும் சர்வதேச யானைகள் அறக்கட்டளை (IEF) இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்கிறது.
  • லண்டானா கமாரா, குரோமோலேனா ஓடோராட்டா மற்றும் மிகானியா மைக்ரந்தா போன்ற ஆக்கிரமிப்புத் தாவரங்கள், குறைந்த ஆக்ஸிஜனுடன் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பமாக்கல் மூலம் பயோச்சாரை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும்.
  • பயோச்சார் ஆனது மண்ணின் தரத்தை மேம்படுத்தவும், பூர்வீகத் தாவரங்களின் மீளுருவாக்கத்தை ஆதரிக்கவும், யானைகளின் வாழிடங்களை வலுப்படுத்தவும் உதவும்.
  • ஆக்கிரமிப்புத் தாவர உயிர்ப்பொருண்மையை பயனுள்ள மண் திருத்தமாக மாற்றுவதன் மூலம் இத்திட்டம் சுழற்சி அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.
  • காடுகளில் உணவு கிடைப்பது மேம்படுவதால், விவசாய நிலங்களை யானைகள் சார்ந்திருப்பது குறைந்து, மனித-யானை மோதலைக் குறைக்க இது உதவும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்